ஐ.நா. அமர்வில் இந்தியா அமெரிக்காவை கைவிட்டது?

ஐ.நா. அமர்வில் இந்தியா அமெரிக்காவை கைவிட்டது?

அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் இடம்பெறும் 80ஆவது ஐ.நா. பொதுச்சபை அமர்வில் (UNGA) இந்தியா அமெரிக்காவையும், மேற்கு நாடுகளையும் கைவிட்டு ஏனைய Global South நாடுகளுடன் பெருமளவில் பேச்சுக்களை செய்துள்ளது.

இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் 50% வரி, இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தை ரம்பே நிறுத்த உதவினார் என்ற ரம்பின் கூற்று, இந்திய மருந்து பொருட்கள் மீதான புதிய வரி, H-1B விசாவுக்கான $100,000 கட்டணம் எல்லாமே மோதி அரசு அமெரிக்காவை வெறுக்க வைத்துள்ளன.

அண்மையில் அமெரிக்க வர்த்தக செயலாளர் Howard Lutnick அமெரிக்கா கட்டாயம் “fix India” என்று இழிவாக பேசியதும் மோதி அரசை விசனம் கொள்ள வைத்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சுமார் 30 நாடுகளுடன் தனித்தனியே பேச்சுக்களை செய்துள்ளார். அதில் அரை பங்குக்கு மேல் Global South நாடுகள். அத்துடன் சீனா தலைமையிலான BRICS போன்ற மேற்கு அல்லாத நாடுகளை கொண்ட குழுக்களுடனும் இந்தியா உரையாடி உள்ளது.

அமெரிக்காவையும், இஸ்ரேலையும் சந்தோசப்படுத்தும் நோக்கில் இதுவரை காசா யுத்தத்தில் மௌனமாக இருந்த இம்முறை இஸ்ரேலை வன்மையாக கண்டித்துள்ளது.

ஜெய்சங்கர் அஸ்ரேலிய வெளியுறவு அமைச்சருடன் உரையாடி இருந்தாலும், சீனாவுக்கு எதிராக அமைக்கும் அமெரிக்கா, அஸ்ரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகளை கொண்ட Quad நாடுகளின் அமர்வுகள் எதுவும் இம்முறை இடம்பெறவில்லை. அதனால் இந்த ஆண்டு Quad அமர்வு இந்தியாவில் இடம்பெறுவது சந்தேகமாகி உள்ளது.

அதேவேளை ரம்ப் பாகிஸ்தான் பிரதமருடனும், பாகிஸ்தான் இராணுவ அதிகாரியுடனும் 80 நிமிடங்கள் உரையாடி உள்ளார்.

ரம்ப் தனது முதலாவது ஆட்சியில், 2019ம் ஆண்டு, பெருமளவில் இஸ்லாமிய காழ்ப்பை காட்டியதால் அதே இஸ்லாமிய காழ்ப்பை கொண்ட பா.ஜ. கட்சியும் அதன் அமெரிக்கா ஆதரவாளரும் ரம்பை புகழ்பாடி Howdy Modi நிகழ்வை Texas மாநிலத்து Houston நகரில் நிகழ்த்தி இருந்தனர். ஆனால் ரம்ப் தற்போது இந்து இந்தியா மீதும் காழ்ப்பை கொட்டுவதால் மோதி அரசு குழம்பி உள்ளது.