ஐ. நா. போதை பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்

ஐ. நா. போதை பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்

கடந்த 3 ஆம் திகதி ஐ. நா. வில் இடம்பெற்ற வாக்கெடுப்பு ஒன்றின் முடிவுகளின்படி கஞ்சா (cannabis) போதைகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. 1961 Single Convention on Narcotic Drugs இணக்கத்தின் Schedule IV பிரிவுக்கு அமைய கஞ்சா இதுவரை தடை செய்யப்பட்டு இருந்தது. அந்த தடையே தற்போது UN Commission on Narcotic Drugs (CDN) தளர்த்தி உள்ளது.

டிசம்பர் 3 ஆம் திகதி இடம்பெற்ற வாக்கெடுப்பில் இந்தியா, அமெரிக்கா, அஸ்ரேலியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா உட்பட 27 நாடுகள் கஞ்சா மீதான தடையை நீக்க ஆதரவாக வாக்கு அளித்து உள்ளன.

ரஷ்யா, சீனா, பிரேசில், பாகிஸ்தான், ஜப்பான், துருக்கி, மற்றும் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் உட்பட 25 நாடுகள் தடை நீக்கலுக்கு எதிர்த்து வாக்களித்து உள்ளன. யுக்கிறேன் வாக்களிக்கவில்லை.  மொத்தம் 53 நாடுகளே தற்போது CDN தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையை கொண்டுள்ளன.

1985 ஆம் ஆண்டு Narcotic Drugs and Psychotropic Substances Act சட்டப்படி தற்போதும் இந்தியாவில் கஞ்சா பயிரிடுவது, தயாரிப்பது, கொண்டிருப்பது, விற்பனை செய்வது, கொள்வனவு செய்வது, காவி செல்வது எல்லாம் குற்றம். இந்தியாவின் இந்த சட்டம் விரைவில் மாறக்கூடும்.