ஒரு அவுன்ஸ் தங்கம் $4,000

ஒரு அவுன்ஸ் தங்கம் $4,000

ஆசிய சந்தைகளில் இன்று புதன் பிற்பகல் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை $4,000 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்நிலை வரும் என்று சந்தை எதிர்பார்த்திருந்தாலும் இவ்வளவு விரைவில் ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் $2,000 ஆக இருந்த தங்கம் கடைசி இரண்டு ஆண்டுகளில் மட்டும் $2,000 ஆல் அதிகரித்து $4,000 ஆகியுள்ளது. ரம்ப் ஆட்சிக்கு வந்தபோது, 10 மாதங்களுக்கு முன்,  தங்கத்தின் விலை சுமார் $2,600 ஆக மட்டுமே இருந்தது. அது சுமார் 54% விலை அதிகரிப்பு.

ரம்பின் இறக்குமதி வரிகள் தங்க விலை உயர்வுக்கு பிரதான காரணம் என்றாலும் அமெரிக்க மத்திய அரசு வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற முடியாமையும் தங்க விலை உயர்வுக்கு காரணம் ஆகிறது. 

வழமையாக அமெரிக்க டாலர் ஒரு ஆபத்து குறைந்த முதலீடாகவே கருதப்பட்டது. தற்போது அமெரிக்க டாலரும் நம்பகத்தன்மையை இழந்துள்ளது. அத்துடன் பங்கு சந்தைகளில் தமது பணத்தை கொண்டிருக்கவும் செல்வந்தர் பயப்படுகின்றனர். எல்லோரும் தங்கத்தையே நாடுகின்றனர்.

(வரைபு: goldprice.org)