ஒலிம்பிக் 2016 நிறைவு

Olympic2016

பிரேசிலின் (Brazil) தலைநகர் ரியோவில் (Rio) நடைபெற்றுவந்த 2016 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் இன்று ஞாயிறு நிறைவு பெற்றது. பெருளாதார மந்த நிலைக்குள்ளும், உள்நாட்டு அரசியல் குழப்பங்களுக்கு மத்தியிலும் பிரேசில் இந்த ஒலிம்பிக் போட்டியை செய்து முடித்துள்ளது.
.
இம்முறையும் அமெரிக்காவே 46 தங்க பதக்கங்கள் உட்பட மொத்தம் 121 பதக்கங்களை பெற்று முதலாவது இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள சீனா 70 பதக்கங்களை, மூன்றாம் இடத்தில் உள்ள பிரித்தானியா 67 பதக்கங்களையும் வென்றுள்ளன.
.
மெருகூட்டும் போதைகள் பாவனை காரணமாக ரஸ்யாவின் பல விளையாட்டு வீரர்கள் இம்முறை ஒலிம்பிக்கில் பங்குகொள்ள அனுமதிக்கப்படவில்லை. அதனால் 2012 ஆம் ஆண்டில் 77 பதக்கங்களை வென்ற ரஷ்யா இம்முறை 56 பதக்கங்களை மட்டுமே வென்றது.
.
ரஷ்யாவின் பல வீரர்கள் பங்கு கொள்ளாமையை அமெரிக்காவும், பிரித்தானியாவும் பயன்படுத்தி தமது பதக்க எண்ணிக்கைகளை உயர்த்தி உள்ளன. 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் 103 பதக்கங்களை வென்ற அமெரிக்கா இம்முறை 121 பதக்கங்களை வென்றுள்ளது. ஆனால் ரஷ்யா ஏற்படுத்திய வெற்றுடத்தை சீனா முறையாக பயன்படுத்தவில்லை. 2012 ஆம் ஆண்டில் 88 பதக்கங்களை வென்றிருந்த சீனா இம்முறை 70 பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது.
.
சிங்கப்பூர் தனது முதலாவது பதக்கத்தை இம்முறை வென்றுள்ளது. நீச்சல் போட்டி ஒன்றில் சிங்கப்பூரின் Joshep Scholing வென்றுள்ளார்.
.

வியட்நாமும் தனது முதலாவது தங்க பதக்கத்தை இம்முறை வென்றுள்ளது.
.