ஓரே இரவில் 30 Tornadoes, 50 அமெரிக்கர் பலி

ஓரே இரவில் 30 Tornadoes, 50 அமெரிக்கர் பலி

அமெரிக்காவின் Arkansas, Illinois, Kentucky, Missouri, Mississippi, Tennessee ஆகிய 6 மாநிலங்களில் நிலவிய பாதகமான காலநிலை காரணமாக வெள்ளிக்கிழமை இரவு குறைந்தது 30 tornadoes (அல்லது twister) உருவாகி, Kentucky மாநிலத்தில் மட்டும் குறைந்தது 50 பேர் பலியாகி உள்ளனர்.

Kentucky மாநிலத்தில் உள்ள Mayfield என்ற நகரில் உள்ள Mayfield Consumer Product என்ற மெழுகுவர்த்தி தொழிற்சாலை ஒன்றில் இரவு சுமார் 110 பேர் கடமையில் ஈடுபட்டு இருந்தனர். அந்த தொழிற்சாலையை ஒரு tornado தாக்கியதில் 10 பேர் வரை பலியாகினர்.

இந்த அனர்த்தம் இரவு நேரத்தில் இடம்பெற்றதால் முழுமையான அழிவு விபரங்களை சனிக்கிழமை பகலே அறியக்கூடியதாக உள்ளது. சில இடங்களில் tornado வுக்கான அறிகுறிகள் சனிக்கிழமை வரை தொடர்கின்றன.

பொதுவாக tornado உருவாகி சில நிமிடங்களில் சில km தூரம் நகர்ந்து பின் வலுவிழந்து அழிந்துவிடும். ஆனால் வெள்ளி இரவு இங்கு உருவான tornado ஒன்று சுமார் 320 km தூரம் நகர்ந்த பின்னரே வலுவிழந்து அழிந்து உள்ளது.

கடுமையான tornado சுமார் 480 km வேக காற்று வீச்சையும், குறைந்தது 3 km விட்டத்தையும் கொண்டிருக்கும். இது நிலத்தில் 100 km வரை நகரலாம்.