கசோகி படுகொலை, 5 பேருக்கு மரண தண்டனையாம்

JamalKhashoggi

ஜமால் கசோகி (Jamal Khashoggi) என்ற Washington Post பத்திரிகையின் எழுத்தாளரை துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்துள் வைத்து படுகொலை செய்த வழக்கை விசாரணை செய்த சவுதி அரசு 5 பேருக்கு மரண தண்டனை வழங்குவதாக இன்று கூறியுள்ளது. ஆனால் மரண தண்டனைக்கு உள்ளாவோர் பெயர்களை சவுதி பகிரங்கப்படுத்தவில்லை.
.
அத்துடன் மேற்படி கொலைக்கு பிரதான காரணிகள் என்று கூறப்படும் உயர் அதிகாரி Saud al-Qahtani (அமெரிக்கா இவரை தடை செய்துள்ளது), உளவு படையின் உபதலைவர் Ahmad Asiri, Mohammed al-Otaibi ஆகியோர் குற்றம் அற்றவர்களாக விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.
.
மேற்படி விசாரணையின் பின் மேலும் மூவருக்கு 24 வருட சிறை தண்டனையும் வழங்கப்பட்டு உள்ளதாம்.
.
மேற்படி படுகொலையை சவுதி அரசு முதலில் மூடி மறைக்க முயன்று இருந்தாலும், பலமான ஆதாரங்கள் வெளிவந்த பின் கொலையை ஏற்றுக்கொண்டது. கசோகி போன்ற உருவத்தை ஒத்த ஒருவரை தூதரகத்தில் இருந்து வெளியேற வைத்து, அதை வீடியோ படம் பிடித்து, கசோகி வெளியேறிவிட்டார் என்றும் சவுதி கூறி இருந்தது.
.
மேற்படி வழக்கு விசாரணை வெளியார் எவரும் இன்றி மூடிய அறைக்கு உள்ளேயே இடம்பெற்றது.
.
சவுதி அரசை சாடி எழுதிய கசோகி ஒரு முன்னாள் சவுதி பிரசை என்றாலும் இறுதி காலத்தில், சவூதி தன்னை தண்டிக்கக்கூடும் என்று கருதி, அமெரிக்காவிலேயே வசித்து வந்தார்.
.