கடனில் மூழ்கியது லெபனான்

Lebanon

அந்நிய நாடுகளிடம் இருந்து பெற்ற கடன்களையோ, அல்லது வட்டிகளையோ மீள செலுத்த முடியாத நிலையில் உள்ளது லெபனான் (Lebanon). வரும் திங்கள் கிழமை $1.2 பில்லியன் பெறுமதியான bond ஒன்றை லெபனான் அடைக்க வேண்டும். ஆனால் தம்மிடம் அந்தளவு பணம் இல்லை என்று கூறியுள்ளார் லெபனான் பிரதமர் Hassan Diab.
.
லெபனான் இவ்வாறு தனது கடனை அடைக்க முடியாமல் இருப்பது இதுவே முதல் தடவை. அமெரிக்க நாணயத்துடன் ஒப்பிடுகையில் லெபனானின் நாணயத்தின் பெறுமதி பாரிய வீழ்ச்சி அடைந்துள்ளதும் லெபனான் இந்நிலைக்கு தள்ளப்பட்டமைக்கு ஒரு காரணம்.
.
சுமார் 6 மில்லியன் மக்களை கொண்ட லெபனான் தற்போது சுமார் $30 பில்லியன் அந்நிய நாட்டு கடனில் உள்ளது. அந்நாட்டின் கடன் அந்நாட்டின் GDP யின் 170% என்று கூறப்படுகிறது. அந்நிய நாடுகளின் கடனினதும், உள் நாட்டு கடனினதும் மொத்த தொகை $89.5 பில்லியன்.
.
விரைவில் லெபனானின் 40% மக்கள் வறுமை கோட்டுக்கு கீழே செல்வர் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
.
International Monitory Fund (IMF) உதவிக்கு வந்தால் மட்டுமே லெபனான் கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க முடியும்.
.