கனடாவிலிருந்து இந்தியா செல்கிறது அன்னபூர்ணா சிலை

கனடாவிலிருந்து இந்தியா செல்கிறது அன்னபூர்ணா சிலை

Mackenzie Art Museum என்ற கனடிய நூதனசாலையில் இருந்த 18 ஆம் நூற்றாண்டின் அன்னபூர்ணா சிலை மீண்டும் இந்தியா செல்கிறது. இதை கனடாவின் University of Regina பல்கலைக்கழகத்தின் முதல்வர் இந்திய தூதுவரிடம் கையளித்து உள்ளார்.

அமெரிக்காவின் Peabody Essex Museum என்ற நூதனசாலையில் பணியாற்றும் Siddhartha Shah என்பவரே மேற்படி சிலையை அடையாளம் கண்டுள்ளார். உடனே அவர் Saskatchewan மாநிலத்தில் உள்ள Regina பல்கலைக்கழகத்துக்கு அறிவிக்க, அவர்கள் விசாரணை ஒன்றை செய்து உண்மையை அறிந்து உள்ளனர்.

இந்த சிலை 1935 ஆம் ஆண்டு மேற்படி நூதனசாலையில் வைக்கப்பட்டது. ஆனால் இது 1913 ஆம் ஆண்டே Norman Mackenzie என்ற நூதன பொருட்கள் கொள்வனவு செய்பவரால் கனடாவுக்கு எடுத்துவரப்பட்டு உள்ளது. கங்கை கரையோரம் உள்ள வரனாசி பகுதியில் இருந்த இந்த சிலை களவாடப்பட்டு கனடியாருக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

செப்டம்பர் மாதம் பிரித்தானியாவும் இராமர், சீதை, இலக்குமணன் ஆகிய மூன்று 15 ஆம் நூற்றாண்டு சிலைகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி இருந்தது. அவை 40 ஆண்டுகளுக்கு முன்னர் திருடப்பட்டு இருந்தன.