கனடாவில் துப்பாக்கிதாரி 16 பேரை சுட்டு கொலை

NovaScotia

கனடாவின் Nova Scotia மாகாணத்தில் உள்ள Portapique என்ற சிறு நகரத்தில் 51 வயதுடைய Gabriel Wortman என்ற துப்பாக்கிதாரியின் சூடுகளுக்கு குறைந்தது 16 பேர் பலியாகி உள்ளனர். பலியானோரில் 23 ஆண்டுகள் சேவையாற்றிய Heidi Stevenson என்ற பெண் போலீசாரும் அடங்குவர். துப்பாக்கிதாரியும் பின்னர் போலீசாரின் சூட்டுக்கு பலியாகி உள்ளார்.
.
இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு ஆரம்பித்து உள்ளது. பொலிஸாருக்கு அழைப்பு கிடைத்த பின் அவர்கள் ஒரு வீட்டுக்கு சென்று அங்கு சில உடல்களை கண்டுள்ளனர். பின்னர் வேறு இடங்களிலும் உடல்களை கண்டுள்ளனர். பலியானோர் பலர் துப்பாக்கிதாரிக்கு அறிமுகம் இல்லாதவர்களாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
.
கனடாவில் இவ்வாறு பெரும் தொகை சூடுகள் இடம்பெறுவது அரிது. சனிக்கிழமை சூட்டுக்கு முன் 1989 ஆம் ஆண்டிலேயே Montreal Ecole Polytechnique என்ற கல்லூரியில் Marc Lepine என்பவரால் 14 பெண்கள் சுட்டு கொலை செய்யப்பட்டு இருந்தனர்.
.