கனடாவில் ​இராணியின் சிலையும் உடைப்பு

கனடாவில் ​இராணியின் சிலையும் உடைப்பு

​கனடாவின் Manitoba மாகாணத்து தலைநகரான வின்னிபெக்கில் (Winnipeg) இருந்த Queen Victoria சிலை உடைக்கப்பட்டு, அதன் தலையும் துண்டாடி Assiniboine என்ற ஆற்றுள் வீசப்பட்டு உள்ளது. அண்மை காலங்களில் கனடாவில் கண்டெடுக்கப்படும் பூர்வீக குடி சிறுவர்களின் புதைகுழிகளே மேற்படி சிலை உடைப்புக்கும், பல கிறிஸ்தவ தேவாலய தீயிடல்களுக்கும் காரணம் என்று நம்பப்படுகிறது.

மேற்படி சிலை Manitoba மாகாணத்து சட்டசபைக்கு முன்னே அமைந்திருந்தது. சிலை உடைக்கப்பட்ட வேளையில் போலீசார் அதை தடுக்க முனைந்திருக்கவில்லை.​ சிலையின் தலையை வெட்டி ஆற்றில் வீசியது வியாழன் பிற்பகல் முதல் வெள்ளி காலை வரையான காலத்தில் இடம்பெற்று உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

1837ம் ஆண்டு முதல் 1901ம் ஆண்டு வரை ஆட்சி செய்த Queen Victoria வுக்கு 1904ம் ஆண்டு மேற்படி சிலை அமைக்கப்பட்டு இருந்தது.

கூடவே அங்கிருந்த சிறிய Queen Elizabeth II சிலையும் கனடா தினத்தன்று உடைக்கப்பட்டு உள்ளது.

லண்டன் நகரில் உள்ள Buckingham Palace சிலை உடைப்பு தொடர்பாக கருத்து கூற மறுத்து உள்ளது.