கனடிய தமிழரும், கள்ள வாக்கும்?

ConservativeParty

கனடாவின் Conservative கட்சியின் மத்திய தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. அதற்கான பிரச்சாரங்கள் நடைபெற்றுவரும் வேளையில், வேட்பாளர்கள் தமக்கு வாக்களிக்கக்கூடிய கட்சி உறுப்பினர்களையும் இணைத்து வருகின்றனர். இவ்வாறு தலைமையை தெரிவு செய்யும் உட்கட்சி தேர்தலில் வாக்களிக்க உரிமை கொண்ட கட்சி அங்கத்தவர்களை இணைக்கும் செயற்பாடுகளின்போது சில Toronto Conservative தமிழ் குழுக்கள் முறைகேடாக செயல்பட்டு வருவதாக சில Conservative காட்சியாளரும், பத்திரிகையாளரும் கருத்து வெளியிட்டு உள்ளனர்.
.
The Huffington Post Canada வெளியிட்ட செய்தி ஒன்றிப்படி சில தமிழ் குழுக்களால் Ontario மாகாண Conservative கட்சி ஆதரவாளர் பட்டியலை களவாடப்பட்டு, அவர்கள் பெயரில் pre-paid credit card மூலம் அங்கத்தவர் தொகை செலுத்தி மத்திய Conservative கட்சிக்கு வாக்களிக்க ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு உள்ளது என்று குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. இதை நிராகரிக்கும் Conservative கட்சி உறுப்பினர், pre-paid card மூலம் அங்கத்தவர் ஆனோரின் அங்கத்துவத்தை நிராகரிக்க வேண்டுகின்றனர்.
.
The Globe and Mail என்ற பத்திரிகையும் இவ்விடத்தில் ஒரு செய்தி வெளியிட்டு உள்ளது. அந்த செய்தியிலும் pre-paid card மூலமான அங்கத்தவர் சேர்ப்பு என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. சுமார் 14,500 தமிழ் அங்கத்தவர் Conservative காட்சியில் அங்கத்துவம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
.
Ottawa நகரில் இருந்து வெளிவரும் The Hill Times என்ற பத்திரிகையும் இது பற்றி செய்தி வெளியிட்டு உள்ளது.
.

Conservative கட்சியின் தலைமை இது சம்பந்தமாக விசாரணைகள் செய்து வருகிறது.
.