தென் கொரியாவில் தற்போது இடம்பெறும் APAC அமர்வுகளுக்கு சென்றுள்ள சீன சனாதிபதி சீயும், கனடிய பிரதமர் கார்னியும் நேற்று வெள்ளி 40 நிமிடங்கள் நேரடியான சந்தித்து உரையாடி இருந்தனர். அப்போது சீ விடுத்த அழைப்பை ஏற்று கார்னி சீனா செல்ல சம்மதித்துள்ளார்.
சீயை சந்தித்த பின் கார்னி மேற்படி சந்திப்பை ஒரு “turning point” என்று புகழ்த்திருந்தார்.
2017ம் ஆண்டுக்கு பின் இரண்டு நாடுகளின் தலைவர்களும் நேரடியாக சந்தித்து உரையாடியது இதுவே முதல் தடவை.
அமெரிக்கா எள்ளு என்று கேட்க எண்ணெய்யுடன் நிற்கும் கனடா கடந்த சில ஆண்டுகளாக சீனாவுடன் முரண்பட்டு வந்துள்ளது. 2018ம் ஆண்டு இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையேயான உறவு பெருமளவில் முறிந்து இருந்தது.
அமெரிக்கா சீனாவின் மின்னில் இயங்கும் வாகனங்களுக்கு (EV) 100% இறக்குமதி வரி விதித்த உடனே அக்கால ரூடோ அரசும் சீன EV வாகனங்களுக்கு 100% வரி விதித்து இருந்தது. பின் சீன உருக்கு, அலுமினியம் ஆகியன உலோகங்களுக்கும் கனடா 25% வரி விதித்து இருந்தது. அதற்கு முன் Huawei நிறுவதின் Meng Wanzhou வை அமெரிக்காவின் விருப்பப்படி கனடா கைது செய்து பின் வழக்கு எதுவும் இன்றி விடுதலை செய்திருந்தது.
பதிலடியாக சீனா இந்த ஆண்டு கனடிய பொருட்களுக்கு பல மேலதிக வரிகளை அறிவித்து இருந்தது. கனடிய canola எண்ணெய்க்கு 100% வரியும், canola தானியத்துக்கு 76% வரியும் அறவிடப்பட்டது. இது கனடாவின் மேற்கு மாநிலங்களை அதிகம் பாதித்தது.
பின் வந்த ரம்ப் ஆட்சியில் பெரும் வரிகள் மூலம் முதுகில் குத்து வாங்கிய கனடா தற்போது சீனாவை நாடுகிறது.
கனடாவின் Manitoba மாநில முதல்வர் Wab Kinew, Saskatchewan மாநில முதல்வர் Scott Moe ஆகியோர் சீன EV மீதான தடைகளை நிறுத்தும்படி கனடிய அரசை கேட்டுள்ளனர்.
