கனடிய CBC ஆவண படத்துக்கு இந்தியா தடை

கனடிய CBC ஆவண படத்துக்கு இந்தியா தடை

கனடாவின் அரச கூட்டுத்தாபன செய்தி சேவையான Canadian Broadcasting Corporation (CBC) கடந்த கிழமை வெளியிட்ட தொலைக்காட்சி ஆவண படம் ஒன்றை இந்தியாவில் வெளியிட மோதி அரசு தடை விதித்துள்ளது.

கனடிய குடியுரிமை கொண்ட சீக்கிய பிரிவினைவாதி ஒருவர் அண்மையில் கனடிய சீக்கிய ஆலயம் ஒன்றுக்கு அருகில் சுட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த கொலையின் பின்னணியில் இந்தியா உள்ளது என்று கனடிய பிரதமர் இந்தியா மீது குற்றம் சாட்டியுள்ளார். இந்தியா கனடாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. Contract to Kill என்ற தடை செய்யப்பட்டுள்ள CBC யின் Fifth Estate ஆவண படம் மேற்படி படுகொலை தொடர்பானதே.

தடையின்படி YouTube, facebook, X ஆகியன மேற்படி ஆவண படத்தை இந்தியர்கள் காண முடியாது முடக்க வேண்டும்.

இதற்கு முன் BBC செய்தி சேவை தயாரித்த India: The Modi Question என்ற ஆவண படத்துக்கும் இந்தியா தடை விதித்து இருந்தது.