கப்பல் மோதி Baltimore பாலம் உடைந்தது, வாகனங்கள் ஆற்றில்

கப்பல் மோதி Baltimore பாலம் உடைந்தது, வாகனங்கள் ஆற்றில்

அமெரிக்காவின் Maryland மாநிலத்து Baltimore நகரினூடு ஓடும் Patapsco என்ற ஆற்றில் சென்ற கொள்கலன் காவும் பெரியதோர் கப்பல் Francis Scott Key Bridge என்ற பாலத்தில் மோதியதால் பாலம் முற்றாக உடைந்து விழுந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி செவ்வாய் அதிகாலை 1:30 மணிக்கு (1:30 ET) இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த பாலம் 1.6 மைல் நீளமானது, 4 lane களை கொண்டது.

அப்போது பாலத்தில் சென்ற வாகனங்கள் ஆற்றில் விழுந்துள்ளன. இழப்புகளின் விபரம் இதுவரை அறியப்படவில்லை.

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட 300 மீட்டர் நீளமான Dali என்ற இந்த கப்பல் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை நோக்கி பயணித்தது.