கரண்டி கொள்வனவுக்கு இலங்கை வந்த அம்பானி

கரண்டி கொள்வனவுக்கு இலங்கை வந்த அம்பானி

விலை உயர்ந்த கரண்டி (kitchenware) கொள்வனவுக்கு இந்திய செல்வந்தர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி (Nita Ambani) 2010ம் ஆண்டு இலங்கை பறந்திருந்தார் என்று கூறப்படுகிறது.

மும்பையில் உள்ள அம்பானி வீடு உலகத்தில் இரண்டாவது விலை உயர்ந்த வீடு என்று கருதப்படுகிறது (முதலாவதாக Buckingham Palace உள்ளது). அவ்வகை வீட்டின் சமையல் பகுதிக்கு தேவையான kitchenware கொள்வனவுக்கு நீதா தனது சொந்த விமானத்தில் இலங்கை பறந்திருந்தார்.

நீதா விரும்பிய Noritake வகை கரண்டிகள், மட்பாண்டங்கள் இந்தியாவிலும் விற்பனை செய்யப்பட்டாலும், இலங்கையில் அவற்றின் விலை குறைவு என்பதாலேயே நீதா இலங்கை பறந்துள்ளார். அத்துடன் வரிகளிலும் நீதா இலாபம் அடைந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

உதாரணமாக 22 கரட் தங்க புருவம் கொண்ட ஜப்பானிய Noritake நிறுவன dinner set ஒன்று இந்தியாவில் $800 முதல் $2,000 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அதை இலங்கையில் $300 முதல் $500 விலைக்கு கொள்வனவு செய்யலாம்.

நீதா கொள்வனவு செய்த பொருட்களின் எண்ணிக்கை சுமார் 25,000 என்று கூறப்படுகிறது. அதில் பெற்ற இலாபம் தனி விமானத்தில் பறந்ததையும் இலாபகரமாக்குகிறது. இவர் கொளவனவு செய்த பொருட்கள் ஒரு 500 அறைகளையும், அதில் 5 உணவகங்களை கொண்ட 5 Star hotel ஒன்றுக்கு போதுமானது என்றும் கூறப்படுகிறது.

1904ம் ஆண்டு ஜப்பானில் ஆரம்பிக்கப்பட்ட Noritake நிறுவனம் 1972ம் ஆண்டு முதல் இலங்கையிலும் Panala என்ற இடத்தில் உள்ள Noritake Lanka Porcelain மூலம் தயாரிக்கிறது. இந்தியாவில் இதன் தயாரிப்பு தொழிற்சாலை இல்லை.