கரோனா தடுப்பு மருந்து போட்டியில் 5 மருந்துகள்

கரோனா தடுப்பு மருந்து போட்டியில் 5 மருந்துகள்
கரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு நடவடிக்கைகளில் 5 நிறுவனங்கள் முன்னிற்கின்றன. இந்த ஐந்து நிறுவனங்களில் 3 சீன நிறுவனங்கள், 1 பிரித்தானிய நிறுவனம், மற்றையது அமெரிக்க நிறுவனம். மேற்படி 5 நிறுவனங்களும் விரைவில் மூன்றாம் கட்ட (phase 3) பரிசோதனையை ஆரம்பிக்க உள்ளன.
.
சீனாவின் Sinopharm Group என்ற அமைப்பின் கீழ் Wuhan Institute of Biologigal Products என்ற ஆய்வு நிலையமும், Beijing Institute of Biological Products என்ற ஆய்வு நிலையமும் இருவேறு மருந்துகளை தயாரிக்க முனைகின்றன. அதேவேளை Sinovac Biotech இன்னோர் மருந்தை தயாரிக்கும் முயற்சியில் உள்ளது.
.
தமது மருந்தை உள்ளெடுத்த 90% பங்காளிகள் 14 நாட்களில் கரோனா நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருந்ததாக Sinopharm கூறுகிறது. தமது மருந்து அனுமதியை பெற்றால், Sinipharm 200 மில்லின் மருந்துகளை ஆண்டு ஒன்றில் தயாரிக்க உள்ளதாக கூறுகிறது. SinoVac ஆண்டு ஒன்றில் 100 மில்லியன் மருந்துகளை தயாரிக்கலாம்.
.
பிரித்தானியாவின் Oxford பல்கலைக்கழகம் AstraZeneca என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் AZD122 என்ற மருந்தும் phase 3 பரிசோதனையை இந்தியாவில் செய்ய உள்ளது. AstraZeneca தமது மறந்து 91% வெற்றியை வழங்கும் என்கிறது. AstraZeneca இந்தியா போன்ற மூன்றாம் நிறுவனங்கள் மூலம் 2 பில்லியன் மருந்துகளை தயாரிக்க முடியும் என்கிறது.
.
அமெரிக்காவின் Moderna என்ற நிறுவனம் mRNA-1273 என்ற மருந்தை phase 3 பரிசோதனைக்கு விட உள்ளது. Moderna 500 மில்லியன் மருந்துகளை தயாரிக்க முடியும் என்கிறது.
.
Phase 3 பரிசோதனைகள் வெற்றிகரமாக அமைந்தால் மட்டுமே அது பொதுமக்களுக்கு கிடைக்கும் மருந்தாக அனுமதிக்கப்படும்.
.