கரோனா பரவலில் வூகானை மிஞ்சும் மும்பாய்

Mumbai

இந்தியாவின் முதன்மை வர்த்தக நகரான மும்பாயில் தற்போது 51,000 கரோனா தொற்றியோர் உள்ளனர். அத்தொகை கரோனா ஆரம்பித்த சீனாவின் வூகான் நகரில் உள்ள கரோனா தொற்றியோர் தொகையிலும் அதிகம்.
.
செவ்வாய்க்கிழமை மட்டும் மும்பாய் மேலும் 1,015 பேர் கரோனா தொற்றி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே தினம் மேலும் 58 பேர் கரோனாவுக்கு பலியாகியும் உள்ளனர்.
.
மும்பாய் நகரம் உள்ள Maharastra மாநிலத்தில் மட்டும் 90,000 கரோனா தொரியோர் உள்ளனர்.
.
முழு இந்தியாவிலும் சுமார் 266,600 பேர் கரோனா தொற்றி உள்ளனர். செவ்வாய்க்கிழமை மட்டும் தேசிய அளவில் 9,987 பேர் புதிதாக கரோனா தொற்றி உள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுள் இந்தியா தற்போது 5 ஆம் இடத்தில் உள்ளது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, பிரித்தானியா ஆகிய நாடுகள் முறையே 1 ஆம், 2 ஆம், 3 ஆம், 4 ஆம் இடங்களில் உள்ளன.
.
ஜூன் 8 ஆம் திகதி இந்தியா ஆலயங்கள், சந்தைகள்/malls, அலுவலகங்கள் அனைத்தயும் மீண்டும் ஆரம்பித்து இருந்தது. போக்குவரத்துக்கள் அங்கு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு உள்ளன.
.
அதேவேளை WHO பாக்கிஸ்தானை மீண்டும் கரோனா முடக்கத்துக்கு செல்லுமாறு கேட்டுள்ளது. அங்கும் கரோனாவின் பரவல் அதிகரித்து உள்ளது. தற்போது பாக்கிஸ்தானில் 108,316 பேர் கரோனா தொற்றியும், 2,172 பேர் பலியாகியம் உள்ளனர்.
.