கற்றலோனியா முன்னாள் அதிபர் பெல்ஜியத்தில் சரண்

Spain

ஸ்பெயின் (Spain) நாட்டின் கற்றலோனியா (Catalonia) என்ற பகுதிக்கு அதிபராக இருந்து, அண்மையில் கற்றலோனியாவை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த Carles Puigdemont பெல்ஜிய (Belgium) நாட்டு பொலிசாரிடம் சரண் அடைந்துள்ளார். இவரை ஸ்பெயினுக்கு நாடு கடத்தும்படி கூறுகிறது ஸ்பெயின் அரசு.
.
Puigdemont ஸ்பெயினில் இருந்து கற்றலோனியாவை பிரித்து, ஒரு தனி நாடாக்க முனைந்த செயல்பாடுகள் மேற்கு நாடுகளின் ஆராதவு கிடைக்காமையால் தோல்வியில் முடிந்தன. தான் கைது செய்யப்படுவதை தவிர்க்க, Puigdemont பெல்ஜியத்துக்கு தப்பி ஓடினார். அதை தொடர்ந்து ஸ்பெயின் இவரை கைது செய்து ஸ்பெயினுக்கு நாடுகடத்தும்படி பெல்ஜியத்திடம் கூறியது. இந்நிலையிலேயே இவர் பெல்ஜிய பொலிசாரிடம் சரண் அடைந்துள்ளார். பெல்ஜிய நீதிபதிகள் இவரை நாடுகடத்துவதா என்பதை தீர்மானம் செய்வார்.
ஸ்பெயினில் இவர் குற்றவாளியாக காணப்படின், இவருக்கு 30 வருடங்கள்வரை சிறை தண்டனை கிடைக்கலாம்.
.
ஸ்பெயின் கற்றலோனியாவுக்கு மீண்டும் தேர்தல் ஒன்றை அடுத்த மாதம் நடத்தவுள்ளது. அப்போதும் Puigdemont ஆதரவு காட்சிகள் 66 முதல் 69 வரையான ஆசனங்களை மீண்டும் வெற்றி கொள்ளலாம் என்று கருதப்படுகிறது. அங்கு அதீத பெரும்பான்மைக்கு 68 ஆசனங்கள் மட்டுமே தேவை. அதனால் கற்றலோனியா குழப்பம் தொடரும் சாத்தியக்கூறுகளே அதிகம்.

.