காசாவில் அமெரிக்காவின் உணவு பொதி நடிப்பு

காசாவில் அமெரிக்காவின் உணவு பொதி நடிப்பு

சனிக்கிழமை அமெரிக்கா காசாவுக்கு விமானத்தில் இருந்து உணவு பொதிகளை போட்டுள்ளது. காசாவுக்கு தாம் செய்யும் அநியாயங்களில் இருந்து தம்மை தூய்மைப்படுத்த செய்யும் கபட நாடகமே இது.

மூன்று C130 விமானங்களில் இருந்து 38,000 உணவு பொதிகள் வீசப்பட்டு உள்ளன.  சுமார் 1.8 மில்லியன் அகதிகள் ஒதுங்கியுள்ள இடத்தில் 38,000 பொதிகள் சுமார் 13,000 பேருக்கு ஒருநாளைக்கு மட்டுமே போதுமானது.

பொதுவாக நில போக்குவரத்து கிடையாதா அல்லது எதிரியின் எல்லைக்குள் உள்ள மக்களுக்கே விமானங்கள் மூலம் பொதிகள் போடப்படும். ஆனால் காசாவை ஆக்கிரமித்து அங்கு உணவு வண்டிகளை செல்ல விடாது தடுப்பது அமெரிக்காவின் அரவணைப்பில் அட்டூழியம் செய்யும் இஸ்ரேல் படைகளே.

அமெரிக்கா மட்டுமன்றி கனடா போன்ற நாடுகளும் இந்த நாடகத்தில் இணையவுள்ளன.