கிரேக்கத்து காட்டுத்தீக்கு 74 பேர் பலி

Greece

கிரேக்கத்தின் (Greece) தலைநகரான எதன்ஸ் (Athens) பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீக்கு (wildfire) இதுவரை குறைந்தது 74 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 170 படுகாயம் அடைந்துள்ளனர். பலியானோர் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்று அரசு கூறியுள்ளது.
.
திங்கள்கிழமை முதல் எதன்ஸ் நகருக்கு கிழக்கே ஒரு தீயும், மேற்கே ஒரு தீயுமாக இரண்டு காட்டுத்தீகள் வேகமாக பரவியுள்ளன. தீக்குள் அகப்பட்ட பலர் கடற்கரைகளுக்கு தப்பியோட, அங்கிருந்து வள்ளங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் சிலர் நீந்த முனைந்து கடலுள் பலியாகினர்.
.
அதேவேளை இன்னோர் கடற்கரை வாடி ஒன்றின் அருகே 26 உடல்கள் செஞ்சிலுவை சங்கத்தினால் கண்டுபிடிக்கப்படுள்ளது.
.
செய்வாய்க்கிழமை பெருமளவு தீ கட்டுப்பாட்டுள் வந்திருந்தாலும், பல இடங்களில் தீ தொடர்ந்தும் பரவி வருகிறது.
.
ஜெர்மனி, இத்தாலி, சைப்ரஸ், குரோசியா ஆகிய நாடுகள் உதவிக்கு விரைந்துள்ளன.
.
2007 ஆம் ஆண்டு கிரேக்கத்தின் Evia தீவில் ஏற்பட்ட தீக்கு 77 பேர் பலியாகி இருந்தனர்.
.
சுவீடன், பின்லாந்து, நோர்வே, லட்வியா ஆகிய நாடுகளும் தற்போது காட்டுத்தீக்களால் பாதிக்கப்பட்டு உள்ளன. சுவீடனில் அதிகூடிய வெப்பநிலை 35 C அளவில் உள்ளது.
.
அதேவேளை ஜப்பானிலும் வெப்பநிலை அதீதமாக உள்ளது. அங்கும் சுமார் 60 பேர் இதுவரை வெப்பத்துக்கு பலியாகி உள்ளனர். கடந்த சனிக்கிழமை மட்டும் 11 பேர் பலியாகினர். நேற்று திங்கள் Kumagaya  என்ற நகரில் வெப்பநிலை 41.1 C ஆக உயர்ந்திருந்தது. இது வளமையான வெப்பநிலையில் 12 C அதிகமாகும்.
.
இன்று செய்வாய் ஜப்பானின் Mino நகரில் வெப்பநிலை 39 C வரை உயர்ந்துள்ளது.
.

ஜூலை மாத ஆரம்பத்தில் கனடாவின் கியூபெக் மாநிலத்தில் அதீத வெப்பத்துக்கு சுமார் 70 பேர் பலியாகி இருந்தனர்.
.