கூகிளின் Toronto Smart City கனவு கலைந்தது

Sidewalk_Labs

அமெரிக்காவின் கூகிள் (Google), நியூ யார்க் நகரை தளமாக கொண்ட தனது கிளை நிறுவனமான Sidewalk Labs மூலம் கனடாவின் Toronto நகரில் Smart City என்ற எதிர்கால நகரை அமைக்க முனைந்து இருந்தது. ஆனால் கரோனா காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டு உள்ளதாக Sidewalk Labs நிறுவன CEO Dan Doctoroff வியாழன் கூறி உள்ளார். உண்மையில் மேற்படி கைவிடலுக்கான காரணம் வேறு என்றும் கூறப்படுகிறது.
.
மேற்படி Smart City திட்டம் 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இருந்தது. இந்த Smart City ஒன்றாரியோ வாவியின் (Lake Ontario) கரையோரம் அமைய திட்டமிடப்பட்டது. இங்கே சாரதி இல்லாத வாகனங்கள் பயணிக்கும், நடைபாதைகள் மக்கள் நடக்கும் பொழுது மட்டும் ஒளியூட்டும், குளிர்காலத்தில் நடைபாதைகள் தாமாக வெப்பமாகும், வீட்டு கழிவுகள் குழாய்கள் மூலம் பயணிக்கும் என்றெல்லாம் கூறப்பட்டது.
.
ஆனால் இந்த திட்டத்தின் பல செயல்பாடுகள் குறிப்பிட்ட காலங்களில் முடிந்திருக்கவில்லை. மக்களின் வரிப்பணம் எவ்வளவு செலவிடப்படும் என்பதும், இந்த Smart City சேகரிக்கும் பொதுமக்கள் தொடர்பான தரவுகள் (data) Google நிறுவனத்தின் சொத்தா அமையும் என்ற நிலைப்பாடுகளே இழுபறிக்கு உண்மையான காரணங்கள்.
.
கடந்த வருடம் Sidewalk Labs புதிதாக 1,524 பக்கங்கள் கொண்ட புதிப்பித்து திட்டத்தை வெளியிட்டு இருந்தது. அத்துடன் தாம் $1.3 பில்லியன் செலவழிக்க உள்ளதாகவும் கூறி இருந்தது. ஆனால் அந்த புதிய திட்டத்துள் புதைந்து இருந்த பாகங்கள் உள்ளூர் சட்டங்களுக்கு முரணானவை என்றும் காணப்பட்டு உள்ளது.
.
ஆரம்பத்தில் 190 ஏக்கர் நிலத்தில் Smart City அமைக்கப்படும் என்று கூறி இருந்தாலும், இறுதியில் 12 ஏக்கர் நிலமாக குறைக்கப்பட்டு இருந்தது. இறுதியில் அதுவும் நிறுத்தப்பட்டு உள்ளது.
.
படம்: Sidewalk Labs
.