கொரோனாவுக்கு பலியாகிறது Virgin Australia விமான சேவை

VirginAustralia

அஸ்ரேலியாவின் இரண்டாவது பெரிய விமான சேவை நிறுவனமான Vergin Australia செவாய்க்கிழமை bankruptcy ஆகிறது. அதனால் இந்த விமான சேவை மூன்றாம் தரப்பு முகவர் நிறுவனம் ஒன்றின் கட்டுப்பாடில் முழுமையாக அல்லது பகுதிகளாக விற்பனை செய்யப்படும். இந்த விமான சேவை அழிந்தால், Quantas விமான சேவை மட்டுமே அந்நாட்டின் ஒரே விமான சேவையாக இருக்கும்.
.
கடந்த 7 வருடங்களாக இந்த விமான சேவை நட்டத்தில் இயங்கி வந்திருந்தாலும், கொரோனா வைரஸின் தாக்கத்தால் இது தொடர்ந்தும் இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இந்த விமான சேவைக்கு தற்போது $3.15 பில்லியன் கடன் உள்ளது. இதில் நேரடியா சுமார் 10,000 பேரும், மறைமுகமாக மேலும் 6,000 பேரும் பணியாற்றுகின்றனர்.
.
தற்போது இந்த விமான சேவையின் 90% உரிமையை சிங்கப்பூர் விமான சேவை, அபுதாபியின் Etihad விமான சேவை, சீனாவின் HNA Group, Richard Branson என்பவரின் Virgin Group ஆகியன கொண்டுள்ளன.
.
இந்த விமான சேவை அஸ்ரேலிய அரசின் உதவியை நாடி இருந்தாலும், செல்வந்த வெளிநாட்டவர் 90% உரிமை கொண்ட விமான சேவைக்கு அரசு உதவி வழங்க முடியாது என்று மறுத்துள்ளது.
.
இந்த விமான சேவையை கொள்வனவு செய்ய 10 தரப்புக்கள் முன்வந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில் அந்நாட்டின் முதலீட்டு நிறுவனமான BGH நிறுவனமும் ஒன்று.
.