கொரோனா பெயரிலும் கொள்ளையடிப்பு

Amazon

கொரோனா வைரஸ் பீதியில் மக்கள் இருக்கையில், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பெரும் கொள்ளையடிப்பிலும் சிலர் ஈடுபட்டு உள்ளனர். குறிப்பாக கிருமிகளை தவிர்க்க பயன்படுத்தப்படும் face mask, கைகளை கிருமி நீக்கம் செய்ய பயன்படுத்தப்படும் hand sanitizer என்பவற்றை மிகையான விலைக்கு விற்றே சிலர் பெரும் பணம் பெற்றுள்ளனர்.
.
அமெரிக்காவின் Tennessee மாநிலத்து Matt மற்றும் Noah Colvin சகோதரர்கள் கொரோனா அமெரிக்காவில் பரவ ஆரம்பித்த காலத்தில் கடைகள் எங்கும் வேகமாக சென்று பெருமளவு hand sanitizer காளை கொள்வனவு செய்திருந்தனர். பின்னர் அவற்றை, அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட போது, $8 முதல் $70 வரைக்கு Amazon னில் விற்பனை செய்வதே இவர்களின் நோக்கம். ஒரு தொகை மேற்படி பொருட்களை இவர்கள் பெரும் விலைகளுக்கு விற்றும் உள்ளனர். இதை அறிந்த Amazon அவர்களின் விற்பனை உரிமையை தடை செய்துள்ளது. தம்மிடம் தற்போது மிஞ்சியுள்ள 17,700 போத்தல்களை என்ன செய்வது என்று தெரியாது முழிக்கின்றனர் சகோதரர்கள்.
.
Ohio மாநிலத்தை சார்ந்த Chris Anderson என்பவர் 10 face mask கொண்ட பெட்டிகள் ஆயிரத்தை ஒவ்வொன்றுக்கும் $15 விலைக்கு கொள்வனவு செய்து பின்னர் Amazon னில் $40 முதல் $50 வரையான விலைக்கு விற்பனை செய்து சுமார் $25,000 இலாபம் கொண்டுள்ளார். இவரின் விற்பனை உரிமையையும் Amazon தடை செய்துள்ளது.
.
Eric என்ற பார வாகன சாரதி தானும் சுமார் ஆயிரம் 10 face mask கொண்ட பெட்டிகளை $20 விலைக்கு கொள்வனவு செய்து, பின் அவற்றை $80 வரையான விலைக்கு விற்றதாக கூறியுள்ளார். அதனால் தான் சுமார் $35,000 முதல் $40,000 வரையான இலாபத்தை அடைந்துள்ளதாக கூறியுள்ளார்.
.