கொரோனா வைரஸுக்கு 304 பலி, இன்று மட்டும் 45

Coronavirus

சீனாவின் வூகான் நகரில் இருந்து உலகம் எங்கும் பரவி வரும் கொரோனா வைரஸுக்கு (coronavirus) இதுவரை 304 பேர் பலியாகி உள்ளனர். இன்று சனிக்கிழமை மட்டும் 45 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் மட்டும் மேலும் 14,551 பேர் இந்த வைரஸின் பாதிப்புக்கு உள்ளாகினர்.
.
மரணங்கள் அனைத்தும் வூகான் நகரை கொண்ட ஹூபெய் (HuBei) மாநிலத்திலேயே இடம்பெற்றுள்ளன. இந்த மாநிலத்திலேயே 9,074 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். அவர்களிலும் சுமார் 444 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
.
இந்த வைரஸ் சுமார் 23 நாடுகளுக்கு பரவி உள்ள நிலையில் ஐ. நா. வின் World Health Organization (WHO) இந்த வைரஸ் பாதிப்பை உலக சுகாதார அபாயமாக (global public health emergency) அறிவித்து உள்ளது. ஐ.நா. வின் இந்த அறிவிப்பு மேலதிக பொருளாதார மற்றும் வைத்திய உதவிகளை பெற உதவும்.
.
அமெரிக்க, ஐரோப்பிய விமான சேவைகள் உட்பட பல விமான சேவைகள் சீனாவுக்கான சேவைகளை முற்றாக இடைநிறுத்தி உள்ளன. பல நாடுகள் சீனாவுக்கான பயணங்களையும் தவிர்க்குமாறு கூறியுள்ளன.
.
2003 ஆம் ஆண்டில் SARS நோய்க்கு 9 மாத காலத்தில் பாதிக்கப்பட்டோர் தொகைக்கு சமனான தொகையானோரை கொரோனா 1 மாதத்தில் பாதித்து உள்ளது.
.