கொழும்பில் இருந்து சென்ற கொள்கலன் கப்பலில் தீ

கொழும்பில் இருந்து சென்ற கொள்கலன் கப்பலில் தீ

கொழும்பு துறைமுகத்தில் இருந்து சென்ற ZIM Charleston என்ற பெயர் கொண்ட கொள்கலன் கப்பல் தீ பற்றி அதில் இருந்த 300 கொள்கலன்கள் பாதிப்பு அடைந்து உள்ளன. அதனால் அந்த கப்பல் மீண்டும் கொழும்பு துறைமுகத்துக்கு திரும்பலாம்.

சீனாவில் தனது பயணத்தை ஆரம்பித்த இந்த கப்பல் ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய துறைகளில் தரித்து பின் ஆகஸ்ட் 8ம் திகதி கொழும்பு வந்துள்ளது. கொழும்பு East Terminal லில் கொள்கலன்களை இறங்கி, ஏற்றி பின் கொழும்பை விட்டு நீங்கி உள்ளது. அந்த பயணம் இந்து சமுத்திரத்தில் தொடர்கையிலேயே தீ பரவி உள்ளது.

இந்த கப்பலின் cargo hold இலக்கம் 4 என்ற பகுதியிலேயே தீ பரவி உள்ளது. இப்பகுதியில் இருந்த கொள்கலன்கள் கொழும்பில் இறக்கப்பட்டு உள்ளன. பின்னர் புதிய கொள்கலன்கள் இப்பகுதியில் ஏற்றப்பட்டு இருக்கலாம்.

ஹாங்காங் நகரில் பதிவு செய்யப்பட்ட இந்த கப்பல் 8,586 கொள்கலன்களை காவ வல்லது. சுமார் 335 மீட்டர் நீளமான இந்த கப்பல் 2011ம் ஆண்டு கட்டப்பட்டது.