கொழும்பு Port City $16 பில்லியன் முதலீட்டை கவரும்?

PortCity

சீனாவின் China Harbour Engineering Company (CHEC) Port City Colombo (Pvt) நிறுவனத்தால் $1.4 பில்லியன் செலவில் அமைக்கப்பட்டுவரும் Colombo Port City வரும் 30 வருடங்களில் சுமார் $13 பில்லியன் முதலீடுகளை கவரும் என்றுள்ளார் CHEC அமைப்பின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை தலைமை அதிகாரி Liang Thow Ming.
.
தாம் Port Cityயை தென்னாசியாவின் வர்த்தக மையம் ஆக அமைய செய்கிறோம் என்றுள்ளார் Liang. இவரின் கூற்றுப்படி இங்கு கட்டப்படும் கட்டடங்களில் 50% பரப்புகள் குடியிருப்புகளுக்கும், 30% அலுவலகங்களுக்கும், 20% ஏனைய பயன்பாடுகளுக்கும் ஓதுக்கப்படும்.
.
இந்த Port Cityக்கு தேவையான நிலம் Galle Face அருகே உள்ள கடலை நிரப்பி பெறப்பட்டதாகும். இந்தன் பரப்பளவு சுமார் 2.69 சதுர கிலோமீட்டர் (269 ha). இந்த நிலம் சீன நிறுவனத்துக்கு 99 வருட குத்தகையில் வழங்கப்பட்டு உள்ளது.
.

இவ்விடயத்தில் இந்தியாவின் எதிர்ப்பு சம்பந்தமாக கேள்வி ஒன்றுக்கு, Liang பதில் கூறுகையில் இந்தியர்களும் Port Cityயில் முதலிடலாம் என்றுள்ளார். நான்கு அல்லது ஐந்து இந்திய நிறுவனங்கள் இங்கு முதலீடும் நோக்கில் உள்ளன என்று இலங்கைக்கான சீன தூதுவர் கூறியுள்ளார்.
.
CHEC நிறுவனத்தின் தாய் நிறுவனமான China Communication Construction Company (CCCC) உள்ளது.
.