கோடைக்கு முன்னரே பெங்களூரில் தண்ணீர் தட்டுப்பாடு

கோடைக்கு முன்னரே பெங்களூரில் தண்ணீர் தட்டுப்பாடு

இந்தியாவின் தொழில்நுட்ப நிறுவனங்களின் மையமான பெங்களூரில் தண்ணீருக்கு பெரும் தட்டுப்பாடு தோன்றியுள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை உச்சம் அடைய  நிலைமை மேலும் மோசம் அடையும்.

அங்கு சுமார் 13,900 குழாய் கிணறுகள் உள்ளதாகவும் அதில் 6,900 கிணறுகள் முற்றாக வற்றி உள்ளதாக கூறப்படுகிறது. வற்றிய கிணறுகளில் சில 1,500 அடி ஆழமானவை.

சுமார் 14 மில்லியன் மக்கள் வாழும் இந்த நகரில் நாள் ஒன்றுக்கு 2 பில்லியன் லீட்டர் நீர் தேவை. ஆனால் தற்போது அதன் 50% நீரே கிடைக்கிறது. 1990ம் ஆண்டுகளில் இங்கு 4 மில்லியன் மக்கள் மட்டுமே இருந்தனர்.

இந்த நகருக்கு சுமார் 100 km தொலைவில் உள்ள காவேரி ஆற்றில் இருந்து மேலும் நீர் எடுக்கும் முயற்சியும் இதுவரை நிறைவாகவில்லை.

வெளிநாடுகள் செய்யும் தவறுபோல் இங்கும் நிலங்களை சீமெந்தால் மூடி விடுவதால் மலை நீர் நிலத்துள் ஊறாது நேரே கடல் சென்று விரயமாகிறது. பெங்களூர் கடல் மட்டத்தில் இருந்து 3,000 அடி உயரத்தில் உள்ளது.