கோத்தபாயாவுக்கு சிங்கப்பூர் மேலும் 14 தின விசா

கோத்தபாயாவுக்கு சிங்கப்பூர் மேலும் 14 தின விசா

முன்னாள் இலங்கை சனாதிபதி கோத்தபாயாவுக்கு சிங்கப்பூர் மேலும் 14 தினங்கள் தங்கியிருக்க விசா வழங்குகிறது. அந்தப்படி கோத்தபாய ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி வரை சிங்கப்பூரில் தங்கி இருக்கலாம்.

GotaGoHome ஆர்ப்பாட்டத்தால் விரட்டப்பட்ட கோத்தபாயா மாலைதீவுக்கு இலங்கை விமானப்படை விமானத்தில் தப்பி ஓடி அங்கிருந்து சிங்கப்பூருக்கு சவுதி அரேபியாவின் பயணிகள் விமானம் ஒன்றில் ஜூலை 14ம் திகதி சென்று இருந்தார். அங்கு அவருக்கு முதல் 14 தின private visit விசா வழங்கப்பட்டது. அந்த விசாவே மேலும் 14 தினங்களுக்கு நீடிக்கப்படுகிறது.

மேற்படி குறுங்கால social visit விசா பொதுவாக ஆகக்கூடியது 30 தினங்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

சிங்கப்பூர் சென்ற கோத்தபாய முதலில் hotel ஒன்றில் தங்கி இருந்தாலும் பின்னர் தனியார் வீடு ஒன்றுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

கோத்தபாய அகதி நிலைக்கு விண்ணப்பிக்கவில்லை என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது. மிக சிறிய நாடான சிங்கப்பூர் பொதுவாக அகதிகளை ஏற்பது இல்லை.

கோத்தபாயா மீண்டும் இலங்கை வரலாம் என்று பந்துல குணவர்தன செவ்வாய்க்கிழமை கூறி இருந்தார். ஆனாலும் பந்துல மேலதிக விபரங்கள் எதையும் வெளியிடவில்லை. அவ்வாறு அவர் இலங்கை வந்தாலும் ஒரு சாதாரண குடியிருப்பாளராக வரும் இலங்கையில் உயரிய அவருக்கு சட்ட பாதுகாப்புகள் எதுவும் இருக்காது.