சவுதியுள் ஒரு யுத்தமும், உலகின் பாராமுகமும்

Awamiya

உலகில் நடக்கும் எல்லா யுத்தங்களையும் அலசி ஆராயும் உலகமும், ஐ.நா.வும் சவுதி அரேபியாவில் நடக்கும் யுத்தம் ஒன்றை பாராது உள்ளன. சவுதி அரேபியாவின் கிழக்கே உள்ள Awamiya நகரை அண்டிய பகுதியில் இடம்பெறும் யுத்தமே இவ்வாறு உலகத்தால் கண்டுகொள்ளபடாது உள்ளது.
.
சுனி இஸ்லாமியரை பெரும்பான்மையாக கொண்ட சவுதியின் கிழக்கே உள்ள Awamiya என்ற நகர் பகுதி சியா இஸ்லாமியரை பெரும்பான்மையாக கொண்டது. சுனி நாடான சவுதிக்கும், சியா நாடான ஈரானுக்கும் இடையில் இடம்பெறும் மோதலின் விளைவே Awamiya என்ற நகர் பகுதி கலவரங்களுக்கும் காரணம்.
.
கடந்த 3 மாதங்களில் மட்டும் இந்த நகரின் நடுப்பகுதியில் பெருமளவு பகுதிகள் அழிக்கப்பட்டு உள்ளன. இதை செய்மதிகள் மூலம் படம் பிடித்து காட்டப்பட்டு உள்ளது. இப்பகுதிகளில் இருந்த சியா மக்களை சவுதி அரசு பலவந்தமாக வேறு இடங்களுக்கு நகர்த்தி வருகிறது.
.
இப்பகுதிகளுக்கு வெளிநாட்டு பத்திரிகையாளர் செல்வதை சவுதி அரசு தடை செய்துள்ளது.
.
Al-Masora என்ற பழைய நகர் பகுதியில் அரசுக்கு எதிரான கிளர்ச்சி குழுக்களும் ஆரம்பித்து உள்ளன. அண்மை காலங்களில் இங்கு சுமார் 15 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
.
இப்பகுதியில் கனடாவால் சவுதிக்கு விற்பனை செய்யப்பட்ட இராணுவ வாகனங்களும் பயன்படுத்தப்பட்டு உள்ளன. அதனால் கனடாவும் குற்றச்சாட்டுக்கு உள்ளானது.
.

கடந்த ஏப்ரல் மாதம் ஐ.நா. இங்குள்ள சியா மக்களை பலவந்தமாக வேறு இடங்களுக்கு நகர்த்துவதை நிறுத்துமாறு கூறியிருந்தது. ஆனால் சவுதி ஐ.நா.வின் கூற்றையும் உதாசீனம் செய்து தொடர்ந்தும் மக்களை நகர்த்தி வருகிறது. இப்பகுதியில் சியா மக்களையே பலவீனப்படுத்தும் நோக்கமே இது என்று கூறப்படுகிறது.
.