சவுதி அணி கட்டாருடன் உறவுகளை துண்டிப்பு

Qatar

சவுதி அரேபியா தலைமையில் சில இஸ்லாமிய நாடுகள் கட்டாருடனான உறவுகளை துண்டித்து உள்ளன. இன்று திங்கள் சவுதி, UAE, எகிப்து, ஆகிய நாடுகள் கட்டாருடனான உறவுகளை துண்டித்தன. அதை தொடர்ந்து யேமென் (Yemen), லிபியா, மாலைதீவு ஆகினாவும் கட்டாருடனான தொடர்புகளை துண்டித்தன.
.
சவுதி கட்டாருடனான தனது எல்லைகளை மூடி, விமான மற்றும் கடல் பயணங்களை நிறுத்தி உள்ளது. எகிப்து கட்டார் தூதுவரை 48 மணித்தியாத்துள் வெளியேறுமாறு பணித்துள்ளது. அத்துடன் தனது தூதுவரையும் திருப்பி அழைத்துள்ளது.
.
சவுதி தலைமயிலான இந்த அணி கட்டார் பயங்கரவாதத்தை வளர்க்கிறது என்று குற்றம் சாட்டுகிறது. உண்மையில் சவுதிக்கு, ஈரானுக்கும் இடையேயான முறுகல் நிலையே இதற்கு காரணம். இந்த முறுகல் நிலையை அமெரிக்காவும், இஸ்ரேலும் தம் நயத்துக்கு பயன்படுத்துகின்றன. அண்மையில் சவுதி சென்ற டிரம்ப், $100 பில்லியனுக்கும் மேலான ஆயுதங்களை சவுதிக்கு விற்பனை செய்ய கையொப்பம் இட்டிருந்தார்.
.
கட்டாரும் பதிலுக்கு மேற்கூறிய நாடுகளுடனான விமான சேவைகளை துண்டித்து உள்ளன.
.
கட்டாரில் அமெரிக்காவின் மிக பெரிய இராணுவ தளம் உள்ளது.
.
2022 FIFA World Cup கால்பந்தாட்ட போட்டி கட்டாரில் இடம்பெறவுள்ளது.
.

அவசியப்படின் தாம் கட்டாருக்கு தேவையான உணவுகளை கடல் மூலம் அனுப்ப விரும்புவதாக ஈரான் கூறியுள்ளது.
.