சார்க் மாநாடு பின்போடப்பட்டுள்ளது

SAARC

அடுத்த மாதம் 9ம், 10ம் திகதிகளில் பாகிஸ்தானில் இடம்பெறவிருந்த சார்க் மாநாடு காலவரையறை இன்றி பின்போடப்பட்டு உள்ளது. இத்தகவலை பாகிஸ்தான் இன்று வெள்ளி அறிவித்து உள்ளது.
.
அண்மையில் பாகிஸ்தான் ஆயுத குழு ஒன்று எல்லை கடந்து இந்திய இராணுவ முகாம் ஒன்றை தாக்கியதில் 28 இந்திய இராணுவத்தினர் பலியாகி இருந்தனர். இதனால் விசனம் கொண்ட இந்தியா தான் பாகிஸ்தான் மாநாட்டில் பங்கு கொள்ளப்போவது இல்லை என்று அறிவித்து இருந்தது.
.
பின்னர் ஆப்கானிஸ்தான், பங்களாதேசம், பூட்டான் ஆகிய நாடுகளும் மாநாட்டில் கலந்து கொள்ளப்போவது இல்லை என்று கூறி இருந்தன.
.
பாகிஸ்தான் குழு தாக்கிய பின், இந்தியா பாகிஸ்தான் நுழைந்து அக்குழுவை தாக்கியதாகவும் கூறி இருந்தது. அதன் பின் இந்திய இராணுவ வீரர் ஒருவர் பாகிஸ்தானுள் தவறுதலாக நுழைந்த போது பாகிஸ்தானின் இராணுவத்தால் காது செய்யப்படு உள்ளார்.
.

இந்தியா தற்போது எல்லைகளில் வாழும் 10,000 வரையான பொதுமக்களை வேறு இடங்களுக்கு நகர்த்தி உள்ளது.
.