சிங்கப்பூரின் தந்தை Lee Kuan Yew நிலைமை கவலைக்கிடம்

LeeKuan

சிங்கப்பூர் மூன்றாம் உலக நாட்டு நிலைமைக்கு தள்ளப்படாமல், முதலாம் உலக நாடுகளுக்கு நிகராக வளர முன்னணி காரணமாக இருந்த Lee Kuan Yew நிமோனியா காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளார். இவருக்கு வயது 91.
.
1959 இல் நாடு சுதந்திரம் அடைந்த போது இவரே சிங்கப்பூரின் முதலாவது பிரதமர் ஆனார். இவர் கடுமையாக ஆட்சி செய்திருந்தாலும், மிகவும் நேமையானதும் சட்டத்துக்கு உட்பட்டதுமான ஆட்சியை செய்து வந்திருந்தார். சிங்கப்பூரை ஒரு பல்கலாச்சார நாடாக வளர்த்தார். 1956 ஆம் ஆண்டில் ஆரம்பித்த இவரின் ஆட்சி 1990 ஆம் ஆண்டுவரை, அவர் சுயமாக ஓய்வு பெறும்வரை நீடித்தது.
.
இவர் தென் சீனாவில் இருந்து வந்து குடியேறியவர்களின் 4ஆம் சந்ததி ஆவர். ஆனாலும் இவரின் முதலாவது மொழி ஆங்கிலமே. பின்னர் சீன மற்றும் ஜப்பானிய மொழிகளை படித்திருந்தார்.
.
1963 ஆம் ஆண்டில் இவரின் தலைமையில் சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்து ஒரு நாடு ஆகியிருந்தாலும் 1965 ஆம் ஆண்டில் உறவு முறிந்து சிங்கப்பூர் மீண்டும் ஒரு நாடானது.