சிங்கப்பூர் Lee Kuan Yew குடும்ப சண்டை பகிரங்கத்தில்

LeeKuan

மேற்கு நாட்டு தரமான அரசியல் தலைவர்களுடன் ஒப்பிடக்கூடிய ஒருசில ஆசிய அரசியல் தலைவர்களுள் சிங்கப்பூரின் தந்தை Lee Kuan Yewவும் ஒருவர். அவர் ஒரு சிறிய, வறிய நகரமான சிங்கப்பூரை செழுமைமிக்க நாடாக மாற்றியவர். ஆனால் அவரின் பிள்ளைகளின் குடுப்ப சண்டை தற்போது பகிரங்கத்துக்கு வந்துள்ளது.
.
Lee Kuan Yewவின் முதல் மகன் (Lee Hsien Loong) தற்போது சிங்கப்பூரின் பிரதமர் ஆகவுள்ளார். இவர் தந்தையின் கட்சியான PAP (People’s Action Party) மூலம் 2004 ஆம் ஆண்டில் பதவியை கைக்கொண்டு இருந்தவர். இவருக்கு ஒரு தம்பியும் (Lee Hsien Yang), ஒரு சகோதரியும் (Lee Wei Ling) உண்டு.
.
பிரதமரின் சகோதரனும், சகோதரியும் இன்று புதன் அதிகாலை 2:00 மணிக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் பிரதமராகவுள்ள தமது சகோதரன் Lee Hsien Loong தம்மை ஏவு பார்க்கிறார் என்றும், Loong தனது மகனை (Li Hongyi) அரசியல் வாரிசாக்கும் நோக்கில் தம்மை தண்டிக்கிறார் என்றும் கூறியுள்ளனர்.
.

இந்த அறிக்கையால் கோபம் கொண்ட பிரதமர் தனது சகோதரனும், சகோதரியும் இவ்வாறு குடும்ப சண்டையை பகிரங்கப்படுத்தியது தவறு என்றுள்ளார். அத்துடன் தான் தனது மகனை அரசியல் வாரீசாக்க முனையவில்லை என்றும் கூறியுள்ளார்.
.