சிம்லாவிலும் நீரில்லை

Simla

இந்தியாவின் உல்லாச பயணிகளின் முதன்மை இடமான சிம்லாவிலும் (Shimla) தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இமய மலையின் அடிவாரத்தில் இருந்தும் சிம்லாவில் அண்மை காலமாக நீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. நீரை முறைப்படி பயன்படுத்தாமை, போதிய மழை இன்மை, மலையில் போதிய snow இன்மை போன்ற பல காரணங்கள் இந்த தடுப்பாட்டை உருவாக்கி உள்ளது.
.
உல்லாச பயணிகளின் வரவு காரணமாக கோடை காலத்தில் சிம்லாவின் சனத்தொகை இரண்டு மடங்காகுமாம். அப்போது அங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 45 மில்லியன் லீட்டர் நீர் தேவைப்படுமாம். ஆனால் தற்போது சுமார் 31 மில்லியன் லீட்டர் நீரே கிடக்கிறது. கடந்த மாதம் கிடைத்த நீரின் அளவு 22 மில்லியன் லீட்டர் ஆக இருந்ததாம்.
.
இங்குள்ள நீர் விநியோக குழாய்கள் பிரித்தானியர் காலத்தில் அமைக்கப்பட்டவை. அவற்றுள் பல உடைந்து உள்ளதால் நாள் ஒன்றுக்கு சுமார் 5 மில்லியன் லீட்டர் நீர் கசிந்து விரையமாகிறது. உலகவங்கியின் $105 மில்லியன் கடன் உதவியுடன் இங்குள்ள நீர் குழாய்கள் திருத்தி அமைக்கும் வேலைகள் ஆராம்பமாகி இருந்தாலும், இந்த திருத்த வேலைகள் 2023 ஆம் ஆண்டு அளவிலேயே முற்று பெறும் என்றும் கூறப்படுகிறது.
.
நீர் விநியோகத்தை கட்டுப்படுத்த அரச அதிகாரிகள் தெருக்களில் உள்ள நீர் குழாய்களை அவ்வப்போது திறந்து பின் மூடி விடுவது உண்டு. அந்த அதிகாரிகளுக்கு தற்போது போலீஸ் பாதுகாப்பு வழங்கப்டுள்ளது.
.
சிம்லாவில் உள்ள உல்லாச பயணிகளின் விடுதிகளில் சுமார் 30% விடுதிகள் தமது பயணிகளின் வருகையை இரத்து செய்துள்ளன. அவர்களிடம் போதிய நீர் இன்மையே காரணம்.

.