சிரியாவிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கா

Syria

சிரியாவில் நிலைகொண்டிருந்த சுமார் 2,000 அமெரிக்க விசேட படையினர் அங்கிருந்து விரைவில் வெளியேறவுள்ளதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது. IS குழுவை அழிக்கவென்று அங்கு சென்ற அமெரிக்க படைகளை ரம்ப் திடீரென திருப்பி அழைப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
.
அமெரிக்கா சிரியாவுள் IS குழுவை அழிக்க என்று கூறி சென்றாலும், சிரியாவின் அரசை அழிப்பது, சிரியாவுள் ஈரானின் செல்வாக்கை அழிப்பது, Kurd குழுக்களுக்கு ஆதரவு வழங்குவது போன்ற உள் நோக்கங்களையும் அமெரிக்கா கொண்டிருந்தது.
.
அமெரிக்காவின் இந்த திடீர் வெளியேற்றம், சிரியாவில் ரஷ்யா ஆளுமை கொண்டதையே எடுத்துக்காட்டுகிறது. ஈரானும் சிரியாவுள் தனது செல்வாக்கை தக்கவைத்துள்ளது.
.
அமெரிக்காவின் வெளியேற்றம் இஸ்ரேலுக்கு பெரிய பாதிப்பே. சிரியாவுள் நிலை கொண்டுள்ள ஈரான் இஸ்ரவேலுக்கு பெரும் அச்சுறுத்தலே. அத்துடன் துருக்கி, சிரியா, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளுக்கு எதிராக போராடும் Kurd ஆயுத குழுக்களும் அமெரிக்க பாதுகாப்பை இழக்கும்.

.