சிரியாவுக்கு S-300, அமெரிக்கா, இஸ்ரேல் குமுறல்

S-300

சிரியாவுக்கு தனது S-300 ஏவுகணைகளை விற்பனை செய்ய ரஷ்யா இன்று திங்கள் தீர்மானித்துள்ளது. இந்த ஏவுகணைகள் இரண்டு கிழமைகளுக்குள் சிரியாவை அடையும் என்றும் கூறப்படுகிறது. இதனால் அமெரிக்காவும், இஸ்ரேலும் விசனம் கொண்டுள்ளன.
.
சில தினங்களுக்கு முன் சிரியாவை தாக்க சென்ற இஸ்ரேல் யுத்த விமானங்களை நோக்கி சிரியா தனது S-200 வகை ஏவுகணையை ஏவி இருந்தது. உடனே இஸ்ரேல் விமானங்கள் அங்கு பறந்துகொண்டிருந்த ரஷ்ய வேவுபார்க்கும் விமானம் ஒன்றி பின் மறைந்து கொண்டன. அதனால் ஏவப்பட்ட S-200 கணை ரஷ்யா விமானத்தை தாக்கியபோது அதில் பயணித்த 15 ரஷ்யர்களும் பலியாகி இருந்தனர்.
.
1960 களில் சேவைக்கு வந்திருந்த S-200 ஏவுகணைகள் நட்பு விமானங்களை எதிரியின் விமானங்களில் இருந்து வேறுபடுத்தும் வல்லமை இல்லாதவை. ஆனால் 1980 களில் சேவைக்கு வந்த S-300 கணைகள் நட்பு விமானங்களை தாக்காது, எதிரியின் விமானங்களை மட்டும் தாக்க வல்லன.
.
இதுவரை காலமும் சிரியா மேலே எதிர்ப்பு இன்றி பறந்து தாக்கிய இஸ்ரேல் விமானங்கள் தற்போது S-300 யினால் மிரட்டப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வருடங்களில் இஸ்ரேல் சிரியா மீது சுமார் 200 தாக்குதல்களை செய்துள்ளது.
.
ரஷ்யா சிரியாவில் உள்ள தனது முகாம்களை மிகவும் நவீன S-400 மூலம் பாதுகாக்கிறது.

.