சிரியா-துருக்கி முறுகல் மீண்டும் உக்கிரம்

Idlib

கடந்த சில நாட்களாக சிரியாவுக்கு, துருக்கிக்கும் இடையிலான யுத்தம் மீண்டும் உக்கிரம் அடைந்துள்ளது. சிரியாவின் வான்படை துருக்கி எல்லையோரம் உள்ள சிரியாவின் பகுதிகளில் துருக்கி ஆராவுடன் நிலைகொண்டுள்ள எதிரணிகள் மீது தாக்குதல் செய்தபோது அங்கிருந்த 33 துருக்கி படையினர் பலியாகி இருந்தனர். அதை தொடர்ந்தே அங்கு யுத்தம் மீண்டும் முறுகல் நிலையை அடைந்துள்ளது.
.
பதிலுக்கு துருக்கியும் சிரியாவின் படைகள் மீதான தாக்குதலை அதிகரித்து உள்ளது. மேற்படி முறுகல் நிலை தொடர்பாக கலந்துரையாட NATO கூடி இருந்தாலும், NATO தலையிட முன்வரவில்லை. துருக்கி ஒரு NATO நாடாகும்.
.
அத்துடன் சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்ய படைகளும் செயல்படுவதால் ரஷ்ய படைகள் மீது தாக்குதல் செய்வதையும் துருக்கி தவிர்க்க வேண்டியுள்ளது.
.
மேற்படி தாக்குதல்கள் காரணமாக மீண்டும் அகதிகள் படையெடுக்கவும் ஆரம்பித்து உள்ளனர். அவர்கள் துருக்கியின் மேற்கு பகுதியால் மீண்டும் ஐரோப்பா செல்ல துருக்கி பாதைகளை திறந்துள்ளது. அதனால் ஐரோப்பிய நாடுகள் மீண்டும் அகதிகள் படையெடுப்புக்கு ஆளாகலாம்.
.
சிரியாவின் அசாத் அரசை கலைத்து தமது ஆதரவு அரசை அமைக்க அமெரிக்கா, சவுதி, கட்டார், ஜோர்டான், என பல நாடுகள் உள்நாட்டு யுத்தம் ஒன்றா ஆரம்பித்து இருந்தாலும், ரஷ்யாவும், ஈரானும் உதவிக்கு வந்தபின் அசாத் கரம் மேலோங்கியது. அதனால் பல நாடுகள் மீண்டும் அசாத் அரசுடன் உறவை புதுப்பிக்க, துருக்கி மட்டும் தனித்து போராடும் நிலையில் உள்ளது.
.