ரம்ப் அரசு அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பம் செய்யும் சிலரிட $5,000, $10,000 அல்லது $15,000 பிணை பணம் அறவிட உள்ளது. திங்கள் அறிவிக்கப்பட்ட இந்த பரிசோதனை திட்டம் (pilot program) ஆகஸ்ட் 20ம் திகதி ஆரம்பமாகி 1 ஆண்டு காலம் நீடிக்கும்.
பொதுவாக விசாவில் அமெரிக்கா சென்று அந்த விசா முடிவதற்கு முன் தமது நாடுகளுக்கு திரும்பாதோரை அதிகம் கொண்ட நாட்டவரையே இந்த மேலதிக சுமை அதிகம் பாதிக்கும்.
ரம்ப் அரசின் கொடுபிடிகள் காரணமாக அமெரிக்கா செல்வோர் தொகை ஏற்கனவே வெகுவாக குறைந்து உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 20% குறைந்த தொகை கனேடியரே அமெரிக்கா சென்றுள்ளனர்.
இந்த பிணை பணம் விசா பெற்றவர் விசா முடிவதற்கு முன் அமெரிக்காவை நீங்கினால் பிணை பணம் திருப்பி வழங்கப்படும்.
ஏற்கனவே திட்டமிடப்பட்ட $250 visa integrity fee வரும் அக்டோபர் மாதம் 1ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.