சில இலங்கை மாணவர்களை மீண்டும் அழைக்கிறது சீனா

சில இலங்கை மாணவர்களை மீண்டும் அழைக்கிறது சீனா

சீனாவில் கல்வி கற்று, கரோனா காரணமாக இலங்கை திரும்பிய மாணவர்களில் சிலரை மீண்டும் சீனாவுக்கு அழைத்து அவர்களின் படிப்பை தொடர இடமளிக்கவுள்ளது சீனா. இந்த அறிவிப்பு பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் மூலம் வியாழன் விடுவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இந்திய மாணவர் எப்போது மீண்டும் சீனா செல்ல அனுமதிக்கப்படுவர் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. சுமார் 20,000 இந்திய மாணவர் சீன பல்கலைக்கழகங்களில் உயர் படிப்பை செய்கின்றனர். இவர்களில் அதிகமானோர் வைத்திய படிப்பை செய்கின்றனர்.

தாய்லாந்து, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் மாணவர்கள் சிலர் ஏற்கனவே சீனா திரும்பி உள்ளனர்.

2018ம் ஆண்டில் 492,185 மாணவர்கள் மொத்தம் 196 நாடுகளில் இருந்து சீனாவில் சென்று படித்ததாக கூறப்படுகிறது. அவர்களில் முதலாம் இடத்தில் 50,000 மாணவர்களை கொண்ட தென்கொரியர் உள்ளனர் என்று தரவுகள் கூறுகின்றன. இரண்டாம் இடத்தில் தாய்லாந்து மாணவர்களும், மூன்றாம் இடத்தில் பாகிஸ்தானியரும் உள்ளனர். அந்த ஆண்டு 28,000 இந்தியர் சீனாவில் கற்றுள்ளனர்.