சில நாடுகள் AstraZeneca கரோனா மருந்தை இடைநிறுத்தம்

சில நாடுகள் AstraZeneca கரோனா மருந்தை இடைநிறுத்தம்

சில நாடுகள் AstraZeneca தயாரித்த கரோனா தடுப்பு மருந்தை தம் நாட்டவருக்கு வழங்குவதை இடைநிறுத்தம் செய்துள்ளன. இந்த மருந்து சிலவேளைகளில் குருதியை திரைய அல்லது கட்டியாக (blood colt) வைக்கிறது என்று மேற்படி நாடுகளால் கூறப்படுகிறது. குருதி திரைவது குருதி ஓட்டத்தை தடை செய்வதால் அது உயிருக்கு ஆபத்தானது.

பல்கேரியாவே (Bulgaria) AstraZeneca கரோனா தடுப்பு மருந்தை இடைநிறுத்திய கடைசி நாடு. ஏற்கனவே டென்மார்க், ஐஸ்லாந்து, நோர்வே, தாய்லாந்து ஆகிய நாடுகள் மேற்படி மருந்தை இடைநிறுத்தி உள்ளன. அஸ்ரேலியவும் இவ்வகை அச்சத்தை கொண்டிருந்தாலும், அந்நாடு ஒரு குறிப்பிட்ட காலத்தில் தயாரித்த AstraZeneca மருந்துகளை மட்டுமே பயன்பாட்டில் இருந்து விலக்கி உள்ளது.

இதுவரை சுமார் 5 மில்லியன் ஐரோப்பியர் இந்த மருந்தை பெற்றுள்ளனர். அவர்களில் சுமார் 30 பேரே இவ்வகை இரத்த திரையலுக்கு ஆளாகி உள்ளனர்.

ஆனாலும் பிரித்தானியா, ஜேர்மனி, மெக்ஸிக்கோ போன்ற நாடுகள் தாம் AstraZeneca மருந்து வழங்கலை இடைநிறுத்தம் செய்யப்போவது இல்லை என்று கூறியுள்ளன.

இலங்கையும் இந்த மருந்தை தொடர்ந்தும் இலங்கையருக்கு வழங்க உள்ளது. இலங்கையில் இதுவரை இருவர் Divulapitiya வில் இறந்து உள்ளதாக அரசு கூறுகிறது.

உலக சுகாதார அமைப்பான WHO இந்த மருந்து பாதுகாப்பானது என்று தற்போதும் கூறுகிறது.

AstraZeneca மருந்து மிகவும் மலிவானது.