சில மாதங்களில் சீனா செவ்வாய்க்கு ஆய்வு கலம் அனுப்பும்

Mars

வரும் சில மாதங்களில் செவ்வாய் கிரகத்துக்கு சீனா தனது ஆய்வு கலம் ஒன்றை அனுப்பவுள்ளது. செவ்வாய்க்கான சீனாவின் இந்த முதல் கலத்தின் பெயரை வெள்ளிக்கிழமை சீனாவின் CNSA (China National Space Administration) வெளியிட்டு உள்ளது. செவ்வாயின் தரையில் இறங்கி ஆய்வு செய்யவுள்ள 200 kg எடைகொண்ட சீன கலம் TianWen 1 என பெயரிடப்பட்டு உள்ளது.
.
TianWen என்பது “தேவலோகத்து கேள்விகள்” என்று கருத்தை கொண்டது. TianWen என்ற தலைப்பு 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்து சீன பாடல் தொகுதி ஒன்றி தலைப்புமாகும்.
.
இந்த ஏவல் 3 பகுதிகளை கொண்டிருக்கும். முதலாம் பகுதியான orbiter ஒரு செய்மதிபோல் செவ்வாயை சுற்றிவரும். இரண்டாம் பாகமான lander தன்னகத்தே மூன்றாம் பாகமான rover வரை (TianWen 1) காவி சென்று செவ்வாயில் தரை இறங்கும். மூன்றாம் பாகமான TianWen 1 என்ற rover இரண்டாம் பாகத்தில் இருந்து வெளியேறி ஆய்வுகளை செய்யும். இரண்டாம் பாகத்தை பத்திரமாக தரையில் இறங்குவதே மிக கடினமான காரியம்.
.
TianWen 1 செய்வாயில் 3 மாதங்களில் மொத்தம் 13 பரிசோதனைகளை செய்யும் என்று கூறப்படுகிறது. பரிசோதனை தரவுகள் orbiter மூலம் பூமிக்கு அனுப்பப்படும்.
.
இதுவரை அமெரிக்காவும், முன்னாள் சோவியத் யூனியனும் மட்டுமே செவ்வாயில் தமது கலங்களை தரையிறக்கி உள்ளன. ஐரோப்பிய ஒன்றியமும், இந்தியாவும் செவ்வாயை வலம்வர செய்மதிகளை மட்டும் அனுப்பி உள்ளன.
.
1971 ஆம் ஆண்டில் சோவியத் அனுப்பிய Mars-2 தரை இறக்கும் பொழுதே விபத்துக்கு உள்ளானது. அதே ஆண்டு சோவியத் அனுப்பிய Mars-3 தரை இறங்கி 20 செக்கன்களில் தொடர்பை இழந்துவிட்டது. இரண்டு rover களும் 4.5 kg எடை கொண்டவை.
.
அமெரிக்கா அனுப்பிய Sojourner (1997), Spirit (2004), Opportunity (2004), Curiosity (2012) ஆகிய நாலு rover களும் பத்திரமாக தரை இறங்கி தரவுகளையும், படங்களையும் அனுப்பி இருந்தன. அவற்றுள் Opportunity இதுவரை சுமார் 50 km தூரம் செவ்வாயில் பயணித்து உள்ளது. அமெரிக்கா Perseverance  என்ற இன்னோர் கலத்தை விரைவில் அனுப்ப உள்ளது.
.