சிவாஜி நூதனசாலை ஆனது மோகல் நூதனசாலை

இந்தியாவின் தாஜ் மகாலுக்கு அருகில் கட்டப்படும் Mughal Museum தின் பெயரை உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி (Yogi Adityanath) Shivaji Museum என்று மாற்றியுள்ளார். இந்தியாவை ஆக்கிரமித்தோர் hero கள் ஆக முடியாது என்கிறார் யோகி.

மேற்படி நூதனசாலைக்கான கட்டுமான வேலைகள் 2016 ஆம் ஆண்டு அப்பொழுது உத்தரபிரதேசத்தில் ஆட்சியில் இருந்த முதலமைச்சர் Akhilesh Yadav காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு இருந்தன. இந்த நூதனசாலை 6 ஏக்கர் நிலத்தில், $22 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டது. இதில் மோகல் காலத்து கலை, கலாச்சார பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட இருந்தன.

ஆனால் தற்போது பா.ஜ. கட்சி ஆட்சியில் சிவாஜி (Chatrapati Shivaji Maharai) தொடர்பான காட்சி பொருட்கள் மேற்படி நூதனசாலையில் வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

யோகி ஆட்சியில் பல இஸ்லாமிய பெயர்களை கொண்ட நகரங்களுக்கும் இந்து பெயர்கள் சூடப்படுகின்றன.

17ஆம் நூற்றாண்டில் நூர்ஜகான் கட்டிய தாஜ் மகாலுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் சுமார் 7 மில்லியன் உல்லாச பயணிகள் செல்கின்றனர். அந்த உல்லாச பயணிகள் $12.2 மில்லியன் வருமானத்தையும் வழங்குகின்றனர்.

16ஆம் நூற்றாண்டில் இருந்து இந்தியாவை ஆண்ட பாரசீகரான Mughal ஆட்சி பிரித்தானியரின் வரவில் அழிந்தது.