சீனாவிடம் துருக்கி ஏவுகணை கொள்வனவு, NATO கவலை

CPMIEC

துருக்கி ஓர் NATO அணி நாடு. ஆனால் துருக்கி NATOவின் மறுதரப்பு நாடான சீனாவிடம் இருந்து பாரிய ஏவுகணை கட்டமைப்பை (missile-defense சிஸ்டம்) கொள்வனவு செய்ய முன்வந்துள்ளது. வழமையாக அமெரிக்கா போன்ற NATO அணி நாடுகளிடம் இருந்து மட்டுமே பாரிய ஆயுதங்களை கொள்வனவு செய்யும் துருக்கி இம்முறை சீனாவை நாடியிருப்பதையிட்டு அமெரிக்கா உட்பட பல NATO நாடுகள் கவலை கொண்டுள்ளன.

இந்த ஏவுகணை உடன்படிக்கை சுமார் U$ 3.5 பில்லியன் பெறுமதி கொண்டதாக இருக்கும்.

சீனாவின் China Precision Machinery Import and Export Corp (CPMIEC) என்ற நிறுவனமே இந்த ஏவுகணைகளை துருக்கிக்கு வழங்கவுள்ளது. அதேவேளை இந்த நிறுவனம் ஈரான், வடகொரிய போன்ற நாட்டு விடயங்கள் தொடர்பாக அமெரிக்காவின் தடைக்கு உட்பட்டதோர் நிறுவனமுமாகும்.

அத்துடன் பல NATO அதிகாரிகள் இந்த சீன ஏவுகணை கட்டமைப்பு ஏனைய NATO கட்டமைப்புகளுடன் ஒத்து இயங்காது எனவும் கவலை கூறியுள்ளனர். ஆனால் NATOவில் இணைந்த பல முன்னாள் சோவியத் நாடுகள் இன்னமும் ரஷ்சிய இராணுவ தளபாடங்களை பாவிக்கின்றனர்.

அண்மையில் Washington Post பத்திரிக்கை செய்தி ஒன்றின்படி இரானுக்குள் இயங்கிவந்த இஸ்ரேலி உளவு அமைப்பு ஒன்றை துருக்கி 2012 ஆம் ஆண்டில் அம்பலப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.