சீனாவின் அதிக பலம் கொண்ட யுத்தக்கப்பல் சேவையில்

சீனாவின் அதிக பலம் கொண்ட யுத்தக்கப்பல் சேவையில்

நேற்று வெள்ளிக்கிழமை சீனா அதிக பலம் கொண்ட Type 075 வகை யுத்த கப்பல் ஒன்றை சேவைக்கு விட்டுள்ளது. இந்த Type 075 கப்பலே உலகில் இரண்டாவது அதிக பலம் கொண்டது. அமெரிக்காவின் USS Zumwalt யுத்த கப்பலே உலகத்தில் முதலாவது அதிக பலம் கொண்டது.

சீனாவின் இந்த புதிய Type 075 யுத்த கப்பல் மொத்தம் 30 யுத்த ஹெலிகளை கொண்டிருக்கும். அத்துடன் இதில் முன்னும், பின்னுமாக இரண்டு ஏவுகணை ஏவிகள் உண்டு. ஒவ்வொன்றும் 64 ஏவுகணைகளை ஒரே நேரம் ஏவ வல்லன. அந்த ஏவுகணைகள் cruise missiles, நீரின் கீழே செல்லும் torpedo போன்று பலதரப்பட்டதாக இருக்கலாம்.

சீனாவின் Type 075 கப்பல் 237 மீட்டர் நீளம் கொண்டது. 2019ம் ஆண்டு சுமார் $4 பில்லியன் செலவில் சேவைக்கு வந்த அமெரிக்காவின் Zumwalt 182.9 மீட்டர் நீளம் கொண்டது.

Type 075 கப்பலில் 1,100 படையினர் பணியாற்றுவர். இது மேலும் 1,200 படையினரை இது காவி செல்லலாம். இதன் மொத்த எடை 40,000 தொன் ஆக இருக்கும். இந்த amphibious கப்பல் படைகளையும், யுத்த வாகனங்களை கரைக்கு காவி சென்று இறக்கும்.

இந்த கப்பல் சேவைக்கு வந்திருந்தாலும் இதில் கொண்டிருக்கப்படவுள்ள Z-8J மற்றும் Z-20J வகை ஹெலிகள் தற்போதும் தயாரிப்பில் உள்ளன. இந்த கப்பலுக்கான கட்டுமான வேலைகள் 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதமே ஆரம்பிக்கப்பட்டு இருந்தது.

மேலும் இரண்டு Type 075 கப்பல்கள் விரைவில் சேவைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. அந்த இரண்டும் தற்போது தயாரிப்பின் இறுதி நிலையில் உள்ளன. பின்னர் மேலும் 5 இவ்வகை கப்பல்கள் சேவைக்கு வரும்.

வெள்ளிக்கிழமை Type 055 வகை destroyer கப்பல் ஒன்றும், Long March – 18 வகை nuclear நீர்மூழ்கியும் கூடவே சேவைக்கு விடப்பட்டு இருந்தன.