சீனாவின் 6 ஆவது செல்வந்தரை கடத்தும் முயற்சி முறியடிப்பு

Midea

சீனாவின் 6 ஆவது பெரிய பணக்காரரான He XiangJian என்பவரை கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது. தற்போது 77 வயது உடைய இவரிடம் சுமார் $25 பில்லியன் சொத்துக்கள் உள்ளதாக அமெரிக்காவின் Forbes நிறுவனம் கூறுகிறது. சிறுவயதில் பொருளாதார இடரில் வாழ்ந்த இவர் தனது கடுமையான உழைப்பால் செல்வந்தர் ஆனவர்.
.
கடந்த ஞாயிரு இரவு இனம் தெரியாதோர் சிலர் மேற்படி செல்வந்தரின் மாளிகைக்கு சென்றுள்ளார். செல்வந்தரை திருடர் கட்டுப்பாடில் வைத்திருக்க, அவரின் ஒரே மகனான 55 வயதுடைய He JianFeng இவர்களின் வீட்டின் பின்னே உள்ள சிறு ஆற்றை நீந்தி கடந்து போலீசாருக்கு தகவல் வழங்கி உள்ளார்.
.
அதே இரவு அவ்விடம் விரைந்த போலீசார் திங்கள் அதிகாலை திருடர்களை கைது செய்துள்ளனர்.
.
வறுமை காரணமாக பாடசாலை படிப்பை நிறுத்திக்கொண்டு மேற்படி செல்வந்தர் தொழிசாலைகளிலும், கமங்களிலும் வேலை செய்ய ஆரம்பித்தவர். 1968 ஆம் ஆண்டில், தனது 26 ஆம் வயதில், பிளாஸ்டிக் போத்தல் மூடிகளை செய்யும் சிறுகைத்தொழிலை ஆரம்பித்து இருந்தார். அந்த வர்த்தகம் மட்டுமன்றி வேறுபல சிறு கைத்தொழில்களையும் ஆரம்பித்தார். அவை எதுவும் பெரும்பணத்தை வழங்கவில்லை.
.
1970 களில் இவர் ஆரம்பித்த காற்றாடி (fan) செய்யும் தொழிலே இவருக்கு பெரும் சொத்தை வழங்கியது. அப்போது காற்றாடிகள் இரும்பில் செய்யப்படதாக இருக்க, 1984 ஆம் ஆண்டில் இவரின் Midea என்ற நிறுவனம் காற்றாடிகளை முற்றாக பிளாஸ்டிக்கில் செய்தது. அடந்த ஆண்டில் இவரின் நிறுவனம் air condition களையும் தயாரிக்க ஆரம்பித்தது.
.
1988 ஆம் ஆண்டில் இவரின் நிறுவனம் உற்பத்திகளை நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் உரிமையை சீன அரசிடம் இருந்து பெற்றது.
.