சீனாவில் உலகின் இரண்டாவது பெரிய நீர்மின் அணை

சீனாவில் உலகின் இரண்டாவது பெரிய நீர்மின் அணை

உலகத்தின் இரண்டாவது பெரிய நீர்மின் அணைக்கட்டான சீனாவில் உள்ள Baihetan நீர்மின் அணைக்கட்டு ஜூலை 1ம் திகதி முதல் மின்னை உற்பத்தி செய்யவுள்ளது. இதில் உள்ள 16 மின் பிறப்பாக்கிகள் மொத்தம் 16,000 மெகாவாட் (MW) மின்னை உற்பத்தி செய்யும்.

உலகத்தில் முதலாவது பெரிய நீர்மின் அணைக்கட்டான சீனாவின் Three Gorges Dam மொத்தம் 22,500 MW மின்னை உற்பத்தி செய்கிறது.

சுமார் $6.3 பில்லியன் செலவில் அமைக்கப்பட்ட Baihetan அணை 289 மீட்டர் உயரம் கொண்டது. ஜுலே முதல் இது மின்னை உற்பத்தி செய்ய ஆரம்பித்தாலும், 2022ம் ஆண்டின் முடிவிலேயே மொத்த 16,000 MW மின் உற்பத்தியும் ஆரம்பமாகும்.

Baihetan அணை Yangtze ஆற்றுக்கு நீர் வழங்கும் Jinsha ஆற்றுக்கு குறுக்கே உள்ளது. Three Gorges மின் அணைக்கட்டு Yangtze ஆற்றுக்கு குறுக்கே உள்ளது.

ஜூலை 1ம் திகதி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 வது ஆண்டு நிறைவு நாளாகும்.

இலங்கையின் பெரிய அணைக்கட்டான Victoria நீர்மின் அணைக்கட்டு 210 MW மின்னை உற்பத்தி செய்கிறது. இது 122 மீட்டர் உயரமும், 520 மீட்டர் நீளமும் கொண்டது.