சீனாவில் தொலைபேசிக்கும் முகப்பதிவு அவசியம்

ChinaVideo

தற்போது உலகிலேயே அதிக அளவில் முகப்பதிவு (facial scan) பயன்படுத்தப்படும் நாடு சீனா. சீன அரசின் ஆதரவுடன் பல அரச சார்பற்ற நிறுவனங்களும் அங்கு தொலைபேசி (smart phone) மூலமான முகப்பதிவை பயன்படுத்தி வருகின்றன.
.
ஞாயிறு முதல் எவராவது புதிய தொலைபேசி (smart phone) கொள்வனவு செய்ய விரும்பின், அவரின் முகப்பதிவை தொலைபேசி நிறுவனத்துக்கு வழங்கவேண்டும்.
.
முகப்பதிவு சந்தேக நபர்களை கைது செய்ய உதவினாலும், தனிநபர் சுதந்திரத்தையும் பாதிக்கின்றது. அண்மையில் சுமார் 60,000 கூடியிருந்த நிகழ்வு ஒன்றில் நின்ற தேடப்பட்டுவரும் சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய கையிருப்பில் உள்ள முகப்பதிவும் அங்கு இருந்த வீடியோ கருவிகளும் உதவின.
.
சீனாவில் தற்போது சுமார் 170 மில்லியன் வீடியோ படப்பிடிப்பு கருவிகள் பொது இடங்களில் உள்ளன. அவை அனைவரையும் கண்காணித்து வருகின்றன. வீதியை விதிமுறைக்கு முரணாக கடப்பது போன்ற சிறு தவறுகளையும் அவை பதிவு செய்து வருகின்றன. அடுத்த வருடமளவில் அங்கு சேவையில் உள்ள வீடியோ கருவிகளின் தொகை 400 மில்லியன் ஆக உயரும் என்று கூறப்படுகிறது. அதாவது சுமார் 3 பேருக்கு ஒரு வீடியோ கருவி.
.
அங்கு பல இடங்களில் பணம் செலுத்துவது, சேவையை பெறுவது எல்லேமே முகத்தை காட்டுவதன் மூலம் பெறப்படும். அதற்கு வசதியாக WeChat மற்றும் Alipay ஆகிய முன்னணி சேவைகள் வசதி செய்துள்ளன.
.
சில இடங்களில் முகப்பதிவு வழங்கினால் மட்டுமே சேவை வழங்கப்படும். உதாரணமாக Hangzhou Safari Park முகப்பதிவு இன்றி எவரையும் உள்ளே அனுமதிக்காது.
.
இவ்வாறு பெறப்படும் தரவுகள் எல்லாவற்றையும் பாதுகாப்பாக வைத்திருப்பது மிக கடினம். இவை திருடப்படின், மக்களின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் ஆகியன மட்டுமன்றி, முகப்பதிவும் திருடம்படும்.
.