சீனாவில் பெருமழை வெள்ளத்துக்கு 12 பேர் பலி

சீனாவில் பெருமழை வெள்ளத்துக்கு 12 பேர் பலி

சீனாவின் ஹேனான் (HeNan) மாநிலத்தில் உள்ள ZhengZhou நகரத்தில் செவ்வாய்க்கிழமை மட்டும் 624 mm மழை பொழிந்துள்ளது. அதில் 1/3 பங்கு மழை பிற்பகல் 4:00 முதல் 5:00 மணி வரையான 1 மணித்திலாத்தூள் பொழிந்துள்ளது. அந்த மழை பின்னர் ஏற்படுத்திய வெள்ளத்துக்கு 12 பேர் பலியாகி உள்ளனர். சாதாரணமாக ஆண்டு ஒன்றில் கிடைக்கும் மழை இங்கே கடந்த 3 தினங்களில் கிடைத்துள்ளது.

சிலர் subway என்ற நிலக்கீழ் ரயிலில் அகப்பட்டு பலியாகி உள்ளனர். சுமார் 500 பேர் subway களில் இருந்து காப்பாற்றப்பட்டும் உள்ளனர். பயணிகள் subway ஆசனங்களில் ஏறி தம்மை பாதுகாத்து உள்ளனர். சுமார் 200,000 பேர் தமது இருப்பிடங்களில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து உள்ளனர்.

மிகையான வெள்ளத்தால் சில அணைகள் உடைக்கப்படலாம் என்று கருதப்படுவதால் அவை கண்காணிப்பில் உள்ளன. Luoyang என்ற இடத்தில் உள்ள அணை ஒன்றின் 20 மீட்டர் தடுப்புகள் ஏற்கனவே உடைந்து உள்ளன. பாதிக்கப்பட்ட இடங்களுக்கான விமான, ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படும் உள்ளன.

மஞ்சள் ஆற்றோரம் (Yellow River) உள்ள ZhengZhou நகரத்தின் சனத்தொகை 12 மில்லியன். இதுவே HeNan மாநிலத்தின் தலைநகர்.