சீனாவில் முழுமை பெற்ற முதல் Boeing 737 MAX

737MAX

இன்று சனிக்கிழமை அமெரிக்காவின் Boeing விமான தயாரிப்பு நிறுவனம் முதல் முறையாக சீனாவில் முழுமை ஆக்கிய 737 MAX விமானத்தை Air China சேவைக்கு கையளித்துள்ளது. அமெரிக்காவின் Boeing விமான தயாரிப்பு நிறுவனம் அமெரிக்காவுக்கு வெளியே தனது விமான தயாரிப்பின் இறுதி பணிகளை (completion work) செய்வது சீனாவில் மட்டுமே.
.
Boeing நிறுவனமும் சீனாவின் Commercial Aircraft Corp of China (COMAC) இணைந்து இந்த இறுதி பணிகளில் ஈடுபட்டுள்ளன. அதற்காக Shanghai நகருக்கு அண்மையில் உள்ள Zhoushan விமான நிலையத்தில் பெரிய தொழில்சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.
.
இங்கு குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால், Boeing நிறுவனத்துடன் இணைந்து 737 MAX தயாரிப்பின் இறுதி பணிகளில் ஈடுபடும் COMAC ஏற்கனவே 737 MAX க்கு நிகரான அளவிலான C919 என்ற தனது சொந்த விமானங்களையும், Boeing க்கு போட்டியாக, தயாரிக்க ஆரம்பித்துள்ளது.
.
ஐரோப்பிய விமான தயாரிப்பு நிறுவனமான Airbus ஏற்கனவே Beijing நகருக்கு அண்மையில் உள்ள Tianjin நகரில் A320 வகை விமானங்களின் இறுதி தயாரிப்பு வேலைகளை செய்கிறது. Airbus அவ்வாறு ஐரோப்பாவுக்கு வெளியே செய்வதும் சீனாவில் மட்டுமே. C919 விமானம் A320 க்கும் போட்டியாக அமையும். இந்த மூன்று விமானங்களும் ஏறக்குறைய ஒரே அளவிலானவை.
.
அடுத்துவரும் 20 வருடங்களில் சீனா சுமார் 7,700 புதிய விமானங்களை கொள்வனவு செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

.