சீனாவில் 160,000 ஆண்டுகளுக்கு முன்னைய Dragon Man

சீனாவில் 160,000 ஆண்டுகளுக்கு முன்னைய Dragon Man

சீனாவில் சுமார் 160,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதரை ஒத்த ஒருவரின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இவருக்கு  Dragon Man அல்லது Homo longi என்று பெயரிடப்பட்டு உள்ளது. இவ்வகையினர் கிழக்கு ஆசியாவில் 160,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த செய்தி இதுவரை விஞ்ஞானம் கொண்டிருந்த நமது ஆதி மூதையர் என்று கருதப்பட்ட Neanderthals மற்றும் Homo erectus மீதான கருத்துக்களை மீளாய்வு செய்ய வைத்துள்ளது.

இந்த எலும்புகள் 1933ம் ஆண்டே Harbin என்ற சீனாவின் வடகிழக்கு பகுதில் உள்ள குழி ஒன்றில் ஒருவர் கண்டிருந்தாலும், அப்பகுதியை அக்காலத்தில் ஜப்பானியர் ஆக்கிரமித்து இருந்ததால் அவர் உண்மையை எவருக்கும் கூறவில்லை. 2018ம் ஆண்டே உண்மை மீண்டும் அறியப்பட்டு, எலும்புகளை Geoscience Museum of Hebei GEO University மீட்டு இருந்தது.

தற்போதைய DNA போன்ற விஞ்ஞான அறிவுகளே எழுப்புகளின் காலத்தை கணிக்க உதவியுள்ளன. இந்த செய்தி இன்று வெள்ளிக்கிழமை வெளிவந்துள்ளது. இங்கிலாந்தின் ஆய்வாளரான Prof Chris Stinger உட்பட்ட The Innovation ஆய்வு வெளியீடு இதை தெரிவித்து உள்ளது.

இவர்கள் வாழ்த்த இடங்களில் இருந்து இவர்கள் பயன்படுத்தி இருக்கக்கூடும் என்று கருத்தப்படக்கூடிய பொருட்கள் எதுவும் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை. அதனால் இவர்களின் வாழ்க்கை முறைமைகள் இதுவரை அறியப்படவில்லை.